search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former Mayor"

    • பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
    • அ.ம.மு.க. மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் சி.டி.சி. கார்னரில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அ.ம.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி 500-க்கும் மேற்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் ரம்ஜானை கொண்டாட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கஞ்சிக்கு அரிசி கொடுத்தது மட்டுமின்றி உலமாக்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் நிதியை அதிகப்படுத்தினார். ஹஜ் பயணிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கினார். பலருக்கு கனவாக இருக்கும் ஹஜ் பயணத்தை அனைவரும் செல்ல வேண்டும் என்பதற்காக முழு முதல் முயற்சியை எடுத்தவர் அவர். ஜாதி, மதம் பாராத அவரின் வழியில்தான் மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் செல்கிறார்.

    பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் என்று எந்த விழா வந்தாலும் அந்த விழாவில் மக்களை சந்தித்து மக்களோடு கொண்டாடுகிற இயக்கம் அ.ம.மு.க.மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி அ.ம.மு.க. டி.டி.வி. தினகரன் பெயரால் இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மக்களோடு மக்களாக இந்த சமுதாயத்தில் ஒரு குடும்பமாக இருக்கும் எங்களுக்கு என்றும் நீங்கள் ஆதரவை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட அவை தலைவர் பாலுசாமி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் ரவி, மாவட்ட பொருளாளர் முத்துக்குட்டி, பகுதி செயலாளர்கள் நெருப்பெரிச்சல் சுகம் வீரகந்தசாமி, ஜெகதீஷ், சிவக்குமார், ராஜாங்கம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம் சீமாட்டி குணசேகர், ஜெயலலிதா பேரவை ஆர்.வெங்கடேஷ், ஜெயலலிதா தொழிற்சங்க பேரவை பாலகிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் மேயர், இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிறுவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
    • சிறுவர்களுக்கு பழங்களை வழங்கினார்கள்

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி விவேகானந்தா சேவாலயத்தை சேர்ந்த 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் ஆகியோர் நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரியில் 11 சிறுவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறியதுடன், பழங்களை வழங்கினார்கள்.

    இதில் அ.ம.மு.க. பொறுப்பாளர்கள் முத்துக்குட்டி, ஜெகதீஷ், திலகவதி, வினுப்பிரியா, கீதா, உஷாமூர்த்தி, நௌபில்ரிஸ்வரன் மற்றும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகிகள் சதீஷ்குமார், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×