என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former pm manmohan singh"

    • உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

    33 ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், மாநிலங்களவையில் சிங் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். நான்கு மாதங்கள் மேலவையில், ஜூன் மாதம் பி.வி.நரசிம்மராவ் அரசின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பதவியேற்றார்.

    குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை பல லட்சம் மக்கள் கண்டுகளித்தனர். 



    இந்நிலையில், சிறப்பு விருந்தினராக டெல்லி வந்துள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.

    அப்போது, அதிபர் சிரில் ராமபோசா ராகுல் காந்தியை தென் ஆப்பிரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் உடனிருந்தார். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
    இந்திய ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது என முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். #ManmohanSingh #Army
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் ஏ பி பரதன் நினைவு செஒற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    சுயநலமும், பொறுப்பற்றத் தன்மையும் கொண்ட அரசியல்வாதிகள் சிலர், நமது அரசியல் நடைமுறையில் மதவாதம் எனும் கிருமியைப் பரப்பி வருகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக இருப்பது மதச்சார்பின்மையே. அதனை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பணி நீதித்துறைக்கு உள்ளது. இத்தகைய முதன்மையான பணியில் இருந்து நீதித்துறையின் கவனம் திரும்பிவிடக் கூடாது.



    இதேபோல், தேர்தல் நடைமுறைகளில் மதம், மத உணர்வுகள், பாகுபாடுகள் உட்புகாமல் காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

    மதச்சார்பின்மை கட்டமைப்பு வலுவிழந்தால், வளர்ச்சி, ஜனநாயகம் என அனைத்து நிலைகளிலும் நாடு வலுவிழக்கும்.
    மதச்சார்பின்மையை காப்பதில் நீதித் துறைக்கு இணையான பங்கு ஊடகங்களுக்கு உள்ளது.

    நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவம், மதச்சார்பற்ற தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அதில், பிரிவினைவாத கோஷம் ஏற்பட்டு, அதன் புனித தன்மையை கெடுத்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார். #ManmohanSingh #Army
    ×