search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foundation laying ceremony"

    • தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது.
    • புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

    மதுரை கோர்ட்டில் நடந்த கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் நிலை வரும். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக வழக்குகளை விரைவாக முடிக்க முடியும்.

    நீதித்துறை கட்டமைப்பில் தி.மு.க.அரசு தொலைநோக்குடன் செயல்படுகிறது. புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம். 3 மாவட்ட நீதிமன்றம் உள்பட 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட கல்லூரியை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக பதிவு செய்த 1000 இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை ரூ.7 லட்சமாக இருந்தது. அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது-

    மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற வளாகம் ரூ.166 கோடிக்கு தொடங்கப்பட உள்ளது. 2 கீழ் தளம், தரைதளம், முதல் தளம், 2-ம் தளம், 3-ம் தளம் என கட்டப்பட உள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு மிகப்பெரிய இடமாக மதுரையே இருந்துள்ளது. சிலம்பதிகாரத்தில் சட்டம் பற்றி 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்ற பின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் முழுவதும் ஆன்லைன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மனுதாக்கல் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 10 மொழியாக்கம் செய்ய உத்தரவிட்டது. அதில் சென்னை ஐகோர்ட்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கத்தில் முதலிடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஸ் பேசுகையில், "உலகில் எந்த பகுதியிலும் நடக்காத ஒரு சம்பவம் மதுரையில் நடந்தது. அதன் மூலம் கண்ணகி மதுரையில் நீதியை பெற்றுள்ளார். மன்னர் தவறாக நீதி வழங்கக்கூடாது என்பதற்கான நிகழ்வு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது" என்றார்.

    உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசியதாவது:-

    மதுரை 3 விசயங்களுக்கு பெருமை வாய்ந்தது. முதல் விசயம் பெண்களை அதிகாரப்படுத்துவது. மதுரையில் மட்டுமே பெண்ணிடம் இருந்து ஆணுக்கு சக்தி கிடைக்கிறது. மற்ற நகரங்களில் ஆண்களிடம் இருந்து சக்தி கிடைக்கும்.

    இரண்டாவது தமிழ் இலக்கியம் வளர்த்த நகரம் மதுரை.

    சமண முனிவர்கள் நாலடியார் என்ற சங்க இலக்கியத்தை கொடுத்த ஊர் மதுரை. மேலும் மதுரை தூங்கா நகரமாக உள்ளது. மூன்றாவது மதுரை கோவில் நகரமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்காக, அம்பா சமுத்திரம் சாலையில் உள்ள வேன் நிறுத்துமிடம் பகுதியில், மாற்று இடத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


    இதையடுத்து, சிலை அமைப்புக் குழு சார்பில், அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    சிலை அமைப்பு குழுத் தலைவர் ஜாண்ரவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞான திரவியம், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, கே.ஆர்.பி. பிரபாகரன், தொழிலதிபர் டி.பி.வி.கருணாகர ராஜா, நெல்லை மண்டல வியா பாரிகள் பேரமைப்பு சங்கத் தலைவர் டி.பி.வி.வைகுண்ட ராஜா, தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், காங்கிரஸ் வடசென்னை- கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம், தொழிலதிபர்கள் மாரிதுரை, செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி போஸ், யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், பா.ஜ.க. அன்புராஜ், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் பழனிசங்கர், மாவட்டச் செயலாளர் கணபதி,

    பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா, திமுக நகரச் செயலாளர் நெல்சன், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், நகரத் தலைவர் தாமஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா,சுந்தரம், சுபாஷ், சமக.நகர செயலாளர் ஜெயபாலன் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சுரேஷ் சொக்கலிங்கம் மயில்,சிலை அமைப்புக் குழு அலெக்ராஜா, நிக்சன், செந்தில், அருமைராஜ், தமிழரசன், ஆசீர் சாம்சன், குமார், சதன்ராஜ், அமரா வதி ஜெகன், ஜெயபால், தங்க ராஜ், மார்க்கெட் சைமன், ரமேஷ் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். பர்வீன்ராஜ் நன்றி கூறினார்.

    • ரூ.10 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான 2 சிறிய பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 6 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான 2 சிறிய பாலமும், சோலை புதூர் பகுதியில் புது சுப்பிரமணியபுரம் மயானத்திற்கு செல்லும் வழியில் சிறிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் , சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயர்புரம் வார்டு கவுன்சிலர் முத்துமாரி, சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரை பேரூராட்சி 12-வது வார்டு குட்டித்தோட்டம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது
    • குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சி 12-வது வார்டு குட்டித்தோட்டம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயத்தையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். விவசாய பணிகள் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட நேரங்களில் குடிநீர் வருவதால் பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகினர். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15 -வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் குட்டி தோட்டத்தில்10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரமேசு பாபு, துணைத் தலைவர் அமுதவல்லி துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கூறுகையில், உள்ளாட்சி அமைப்பின் முக்கிய பணி என்பது பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதாரப்பணிகள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு கிடைக்க செய்வதாகும். இதில் எந்த விதமான பாரபட்சமும் தாமதமும் இருக்கக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன்படி தென்திருப்பேரை பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் தென்திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்த், கீதா, குமரேசன், மாரியம்மாள், சீதா லட்சுமி, சண்முகசுந்தரம், காசி லட்சுமி, துரைராஜ், கல்லாம்பாறை தி.மு.க. வார்டு செயலாளர் ராஜேந்திரன், குட்டிதோட்டம் முத்துகிருஷ்ணன், கீர்த்தி, பெருமாள், ராஜகோபால், பாலகிருஷ்ணன் வெங்கடேசன், சுரேஷ் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இருந்துள்ளது.

    தற்போது தமிழக அரசு நிறைவேற்றும் வகையில் சங்கரன்கோவிலில் மையப்பகுதியில் இயங்கி வந்த பழைய அண்ணா பஸ் நிலையம் கட்டிட உறுதி தன்மையை இழந்ததை அடுத்து அதனை இடித்து தற்போது அங்கு சுமார் ரூ. 9 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகராட்சி பொறியாளர் ஹரிகரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து புதிய பஸ் நிலைய பணிகளை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, மாவட்ட இளைஞரணி சரவணன், தொமுச நெல்சன், அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், ஜெயக்குமார், அரசு ஒப்பந்ததாரர்கள் மாரியப்பன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • அரியப்பபுரம் ஊரணியை ஆழப்படுத்தி தடுப்புச்சுவர் அமைத்திட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை ஏற்று அடிக்கல் நாட்டினார்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியப்பபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரியப்பபுரம் ஊரணியை ஆழப்படுத்தி சிறுகுளம், படித்துறை, தடுப்புச்சுவர் அமைத்திட ரூ. 18.15 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அரியப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.டி. த. தினேஷ் குமார் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை ஏற்று அரியப்பபுரம் ஊரணியை ஆழப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினர்.

    இதில் மாவட்ட பஞ்சா யத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனி துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வளன்ராஜா, துணைத் தலைவர் சக்திகுமார், வார்டு உறுப்பினர்கள் செல்லம்மாள் , செல்வி, எலிசபெத், ஷேக், ரமேஷ், தி.மு.க. நிர்வாகிகள் சிவ அருணன், மோகன்லால், ராஜசுதன், செந்தூர் முருகன், சேட், சின்னகிலி,ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×