search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியப்பபுரம் ஊராட்சியில் நலத்திட்ட பணிக்கு ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா-  தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பங்கேற்பு
    X

    அடிக்கல் நாட்டு விழாவில் சிவபத்மநாதன் கலந்துகொண்டபோது எடுத்தபடம்.


    அரியப்பபுரம் ஊராட்சியில் நலத்திட்ட பணிக்கு ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா- தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பங்கேற்பு

    • அரியப்பபுரம் ஊரணியை ஆழப்படுத்தி தடுப்புச்சுவர் அமைத்திட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை ஏற்று அடிக்கல் நாட்டினார்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியப்பபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரியப்பபுரம் ஊரணியை ஆழப்படுத்தி சிறுகுளம், படித்துறை, தடுப்புச்சுவர் அமைத்திட ரூ. 18.15 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அரியப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.டி. த. தினேஷ் குமார் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை ஏற்று அரியப்பபுரம் ஊரணியை ஆழப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினர்.

    இதில் மாவட்ட பஞ்சா யத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனி துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வளன்ராஜா, துணைத் தலைவர் சக்திகுமார், வார்டு உறுப்பினர்கள் செல்லம்மாள் , செல்வி, எலிசபெத், ஷேக், ரமேஷ், தி.மு.க. நிர்வாகிகள் சிவ அருணன், மோகன்லால், ராஜசுதன், செந்தூர் முருகன், சேட், சின்னகிலி,ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×