search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free career training"

    • இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது
    • உற்பத்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில், திறமையான மனிதவளத்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவை தொழில்துறைக்கு அதிக உற்பத்தி மேலாண்மை மற்றும் மேற்பார்வை திறனை வழங்குகிறது. தொழில் துறையினருக்கு உற்பத்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சிலுடன் இணைந்து திருப்பூர் மண்டலத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சியை வழங்கி வருகிறது. சிறப்பு தையல் எந்திர ஆபரேட்டர், மெர்ச்சண்டைசிங் பயிற்சி வகுப்புகள் திருப்பூரில் ஆயிரம் பேருக்கு வழங்க உள்ளனர். இந்த பயிற்சி திட்டத்தின் தொடக்கவிழா வருகிற 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக கலையரங்கத்தில் நடக்கிறது. இதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்குகிறார். ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் முதல் குழுவில் படிக்க தேர்வான பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

    • தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும்.
    • இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இவ்வகுப்பானது வருகிற 9-ந்தேதி (திங்ட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இதில் ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடைகள் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும் தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். இதில் குறைந்த காலியிடங்களே உள்ளது. எனவே பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பேன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றுடன் நேரில் வரவும். அல்லது http://tinyurl.com/4z2 என்ற ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மேலும் இதுபற்றி தெரிந்து கொள்ள 9952518441, 8610533436, 9489043923 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் கனரா வங்கியின் இலவச தொழிற்பயிற்சிக்கு கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் நபா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் ஆண்கள், பெண்களுக்கு இலவச சிசிடிவி கேமரா, தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியின் முடிவில் திறன் இந்தியா சான்றிதழும், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும். ஆகவே, பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். 

    ×