search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free eye checkup camp"

    • ஆறுமுகநேரி மெயின் பஜார் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 7 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண்புரை நோய், அடிக்கடி தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டது. முகாமில் சுமார் 60 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். பலருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை கண் பரிசோதனை குழு மருத்துவர் இந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பிரமணி, ஆலோசகர் ராமலெட்சுமி, உதவியாளர் பேச்சுகுமார், ஆறுமுகநேரி ஆட்டோ ஒட்டுநர் சங்க தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் கிளாட்சன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

    • முகாமை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஆர்த்தி பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    விளாத்திகுளம்:

    மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் விளாத்திகுளம் ஸ்ரீ சத்திய சாய் சேவா சமிதி மற்றும் ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு திட்டம், ஆர்த்தி மருத்துவமனை, தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.முகாமை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஆர்த்தி பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.முகாமில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் கண் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு 43 போ்கள் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் ஸ்காட் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் செய்திருந்தார்.

    • செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ஷிபா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
    • முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ஷிபா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமாஅத் தலைவா் அகமது மீரான் தலைமை தாங்கினார்.கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை நிர்வாகக்குழு தலைவா் அப்துல்ரஷீத் முன்னிலை வகித்தார். வல்லம் நேஷனல் பள்ளி தாளாளா் அப்துல்மஜீத் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து வல்லம் ஜூம்மா மஜீத் பள்ளிவாசல் தலைமை இமாம் சுல்தான் ஷிபா மெடிக்கல் சென்டரை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னா் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை முகாமை குற்றாலம் முத்துநகர் அரிமா சங்க பட்டயத்தலைவா் சண்முகநாதன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

    முகாமில் நெல்லை டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை கண் மருத்துவா் அபினயா தலைமையில் மருத்துவ குழுவினா் இலவச கண்பரிசோதனை மற்றும் மருந்து ,கண்கண்ணாடி, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். நிகழ்ச்சியில் முதன்மை முகாம் மேலாளா் மாணிக்கம், விழிஒளி ஆய்வாளா் சிஞ்சு, உதவி விழிஒளி ஆய்வாளா்கள் மனோ, ஹசீனா உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா். ஷிபா மெடிக்கல் சென்டர் நிர்வாகி பீர் முகம்மது நன்றி கூறினார்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
    • ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலை பாதுகாப்பு வாரம் கடந்த 11-ந் தேதி முதல் 17 தேதி வரை அனுசரிக்கப்பட்டது. இதில் சாலை விதிகளை கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.

    இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு வாரத்தின் நிறைவு நாளான நேற்று கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து ஆட்டோ, டாக்சி மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 

    ×