search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FRENCH OPEN 2023"

    • பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
    • அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.

    அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சுவரேவ் (ஜெர்மனி)-எட்செவரி (அர்ஜென்டினா), கேஸ்பர் ரூட் (நார்வே)-ஹோல்கர் ருனே (டென் மார்க்) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (ரஷியா), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் கால்இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜபீர் (துனிசியா)-ஹதாத் மயா (பிரேசில்), இகா ஸ்வியாடெக் (போலந்து)-கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    • ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.
    • ஜோகோவிச் மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 3-1 செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    முதல் செட்டை 4-6 என இழந்த போதிலும் அடுத்த மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    • சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 22-வது இடத்தில் இருப்பவரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த 28-ம் நிலை வீரரான டிமிட்ரோவை எதிர் கொண்டார்.

    இதில் சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதுகிறார்.

    எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார். 23 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 4-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), 6-வது வரிசையில் உள்ள ஹோல்கர் ருனே (டென்மார்க்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) ஹாதத்மையா (பிரேசில்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.
    • கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 22-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 6-2, 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாபோவுடன் மோதுகிறார்.

    அதுபோல டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா), மார்கோஸ் ஜிரோன் (அமெரிக்கா) நிக்கோலஸ் ஜாரி (சிலி) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜூலியா கிராபரை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஓசியன் டோடினை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    ×