என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Frontline School"
- 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர்.
- திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்,
திருப்பூர் :
திருப்பூர் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்.இப்போட்டியில் ரேங்கிங், ஸ்பெஷல் மற்றும் சாம்பியன்ஷிப் போன்ற பல்வேறு பிரிவுகளில் 50 க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர். மிகச்சிறந்த பங்கேற்பிற்கான விருதினையும் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சார்பில் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்கு னர் சக்திநந்தன், துணை இயக்குனர் வைஷ்ணவி நந்தன் மற்றும் தலைமை ஆசிரியை சியாமளா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
- தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் தி பிரண்ட்லைன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரசின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ஈஸ்வரன் , தி பிரண்ட்லைன் பள்ளி தாளாளர் டாக்டர் கே.சிவசாமி மற்றும் இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்து மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கண்காட்சியில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அசத்தினர். கண்காட்சியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியிலிருந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கேற்று ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ் காட்சிப்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பரிசளிப்பு விழாவில் பள்ளியின் இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி டீ பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
- மாணவ-மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.
வீரபாண்டி :
திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி டீ பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளியைச் சேர்ந்த 10 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிவாகை சூடினர். 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தனுஷ் 10 புள்ளிகளும், 16 வயதுக்குட்பட்டோர் போட்டியில் ஜோ ஜெப்ரி 14 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.
19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் மாணவன் சண்முகம் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர், 800 மீட்டர் என அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார். 10 முதல் 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் 100, 200, 400, 600, 800 மீட்டர் ஓட்டம் முதலான போட்டியில் மாணவ-மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். 14, 16, 19 வயதுக்குட்பட்டோர் உயரம் தாண்டும் போட்டியில் பிரணவ், ஜெப்ரி, சண்முகம் ஆகியோர் முந்தைய சாதனையை முறியடித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும், உறுதுணையாக இருந்த விளையாட்டு ஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.
- யோகா போட்டியில் தமிழகம் முழுவதும் 700-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- 8-வது மாநில அளவிலான யோகா போட்டி சேலம் விநாயக மிஷன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
வீரபாண்டி :
தமிழகத்தில் 8-வது மாநில அளவிலான யோகா போட்டி சேலம் விநாயக மிஷன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் திருப்பூர் பிரண்ட்லைன் மிலோனியம் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி எஸ்.சம்யுக்தா ஸ்ரீ கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார். போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியையும், அதற்கு உறுதுணையாக இருந்த யோகா ஆசிரியர் நந்தகுமாரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவசாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி சக்தி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்