search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Full shop closure strike"

    • மின் கட்டணத்திற்கான 430 சதவீத நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
    • மாவட்ட பொதுச்செயலாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை எம்மரிங் லெதர் தொழில்கள் சங்கம் , பெருந்தலைவர் காமராஜர் குறுந்தொழில்கள் சங்கம், பெல் சப்ளையர்ஸ் அசோசியேஷன், பெல் ஆன்சிலரி அசோசியேசன் அரக்கோணம் சிட்கோ மேனுஃபேக்சரர்ஸ் அசோசியேசன், ராணிப்பேட்டை சாமில் ஓனர் அசோசியேஷன், அம்மூர் நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு செய்துள்ள நிலை கட்டணம், பரபரப்பு நேர கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை சிப்காட் , சோளிங்கர் அரக்கோணம் திமிரி மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன எனவும், மின் கட்டணத்திற்கான 430 சதவீத நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம், கோரிக்கை , மின்னஞ்சல், ஸ்பீட் போஸ்ட் மனுக்கள் அனுப்புதல் ஆகிய போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.

    இருப்பினும் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதாக ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் முரளி தெரிவித்தார்.

    ×