என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "full swing"
- முதல்-அமைச்சர் பங்கேற்பு: மண்டபத்தில் விழா பந்தல்-மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி வருகிறார். அன்று ராமநாதபுரத்தில் நடக்கும் தி.மு.க. பாகமுகவகர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
மறுநாள் 18-ந் தேதி மண்டபத்தில் மீனவர்கள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மண்டபத்தில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டை யொட்டி அங்கு விழா பந்தல், மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.100-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்டபம் முகாம் அருகே மணல்மேடாகவும், பள்ளங்களாகவும் இருந்த பகுதி முழுமையாக பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டது.அதோடு அந்த இடத்தில் இருந்த செடி,கொடிகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.இன்னும் மூன்று நாட்களுக்குள் விழா மேடை பந்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
- புதிய பஸ் நிலைய பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
- ஜே.சி.பிஎந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையத்தை நவீனமாக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த பஸ் நிலையத்திற்கு மாற்றாக ராமநாதபுரம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள சந்தைதிடல் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய நவீன பஸ் நிலைய வரைபடம் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. புதிய பஸ் நிலையம் 4.1 ஏக்கர் பரப்பளவில் 35 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று செல்வதோடு, 92 கடைகள், வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைக்கப்பட உள்ளது.
மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, புறக்காவல் நிலையம், முன்பதிவு அறை, உணவகங்கள், 16 கழிப்பறைகள், பேவர் பிளாக் நடைபாதை வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த பணிக்கான பூமிபூஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. தற்போது புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டிங்களை ஜே.சி.பிஎந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் (2023) அறிமுகப்படுத்தியது.
- யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் குழந்தைகளுக்கான மத்திய அரசின் யு - வின் செயலி பயன்பாட்டை விரிவுபடுத்த தமிழக சுகாதாரத்துறை ஆயத்தமாகி வருகிறது.
நோட்டில் மட்டுமே இருந்து வரும் தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல்மயம் ஆக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.
கர்ப்பிணியர், குழந்தைகளுக்கான தடுப்பூசி விபரம் மற்றும் அட்டவணையை இச்செயலி மூலமாக மொபைல் போன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் யு - வின் செயலி இயக்கம் மே மாதம் அறிமுகமானது. மீதமுள்ள 36 மாவட்டங்களில் இம்மாதம் 31-ந்தேதிக்குள் யு - வின் செயலியை இயக்கத்துக்கு கொண்டு வர சுகாதாரத் துறை ஆயத்தமாகியுள்ளது.
மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட இணை இயக்குனர், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி, எந்த நாளில் செலுத்த வேண்டும் என்பதில் பெற்றோர் பலர் ஒரு வித குழப்பம் அடைகின்றனர்.மொபைல் போன் வழி நினைவூட்டல் இருந்தால் தடுப்பூசி செலுத்த முன்கூட்டியே தயாராகி விடுவர். சரியான தேதியில் செலுத்துவது சாத்தியமாகி விடும்.யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னே ற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
- கோவையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கான ஏற்பா டுகள் செய்யப்பட்டது.
ஆனால் சிலை வைக்க அப்போதைய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் பீடம் அமைக்கப்பட்டதோடு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கருணாநிதி சிலை வைக்க 3 ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அனுமதி கிடைத்தது. அதைத்தொடர்ந்து கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னே ற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக டி.என்.பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே சிலை வைப்பதற்காக நிர்வாகத்திடம் முழு அனுமதி பெற்ற பின்பே சிலை நிறுவ வேண்டும் என்று கூறிவிட்டார்.
தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளதால் அடுத்த மாதம் 4-ந் தேதி காலை ஈரோட்டில் நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, நிறைவேறிய திட்டங்களை திறந்து வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாலை கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பின்னர் 5-ந் தேதி ஈரோட்டில் புத்தக திருவிழாவை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா மட்டுமில்லை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும். குருநாதசாமி கோவில் திருவிழா தேரோட்டத்தை பொரு த்தவரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையுடன் கலந்து முடிவு செய்யப்படும்.
இந்த ஆண்டு கீழ்பவானி பாசனத்திற்கு அடுத்த மாதம் 1 அல்லது 15-ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து கோவையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் உள்பட மாவட்ட, ஒன்றிய தி.மு..க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை-திருச்சி இடையே மின் ரெயில் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
- மதுரை-ராமேசுவரம் வரையும், திருச்சி- மானாமதுரை-விருதுநகர் வரை நடைபெற்றுவருகிறது.
மானாமதுரை
நாடுமுழுவதும் அனைத்து ரெயில் பாதைகளும் மின் மயமாக்கம் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதில் மதுரை-ராமேசுவரம் வரையும், திருச்சி- மானாமதுரை-விருதுநகர் வரை நடைபெற்றுவருகிறது.
தற்போது ராமநாதபுரம் வரை மின் பாதையில் வாரம் ஒருமுறை செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் செல்கிறது. தினமும் சோதனை அடிப்படையில் மின்சார ரெயில் என்ஜின் இயக்கப்படுகிறது. மானாமதுரை-விருதுநகர் இடையே அமைக்கப்பட்ட மின்பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் ஆய்வு முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது திருச்சியிலிருந்து காரைக்குடி வரை மின்பாதை பணிகள் முழுவதும் முடிக்கப் பட்டுள்ளது.
மீதமுள்ள காரைக்குடி - மானாமதுரை இடையே உள்ள பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இறுதி பணியாக மானாமதுரை வைகைஆற்றில் உள்ள ரெயில் பாலத்தில் சிறப்பு ரெயில் ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்தின் தூண்களில் மின் கம்பங்கள் அமைக்கும்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
அதன் பின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் புதிய மின்பாதையில் அதி வேக ெரயிலை இயக்கி சோதனை நடத்துவார். இந்த பணி முடிந்தவுடன் நேரடியாக சென்னையில் இருந்து காரைக்குடி- மானாமதுரை வழியாக புதிய மின் பாதையில் விருதுநகர், கன்னியாகுமரி வரை செல்ல முடியும்.
வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில்களும் மின் பாதையில் மானாமதுரை வரை வருவதால் பயணநேரம் குறைய வாய்ப்பு உள்ளது. மின்பாதை பணிகள் நிறைவுபெற்றவுடன் மானாமதுரை- காரைக்குடி வழியாக தென்மாவட்டங்களில் இருந்து கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களை சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு இயக்கவேண்டும் என சிவகங்கை மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்