search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FX Engineering College"

    • புனே டாசல்ட் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் துறையில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தேசிய அளவில் தயாரிப்பு வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.
    • இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் இருந்து 245 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 1774 குழுக்களில், மொத்தம் 8870 மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    புனே டாசல்ட் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் துறையில் படைப்பாற்றல், புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பொறியியல் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல், புதிய தயாரிப்பு வடிவமைப்பு மூலம் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தேசிய அளவில் தயாரிப்பு வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.

    இதில் இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் இருந்து 245 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 1774 குழுக்களில், மொத்தம் 8870 மாண வர்கள் கலந்து கொண்டனர். இதில் நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி எந்திரவியல் துறை மாணவர்கள் பிரவீன், மனோஜ்குமார், ஜோயல் ராஜ், லேவிஷ் பெஸ்ட்ஸ் க்ராஸ்ட்டென் ஆகியோர் பங்கேற்று பவர் ஜெனெரேஷன் குறித்த புதிய வடிவமைப்பு கண்டுபிடிப்பை சமர்ப்பித்தனர். குறைந்த காற்று வேகத்தில் கூட மின்சாரம் தயாரிக்கலாம் என்ற அடிப்படை அம்சத்தை வழங்கினர்.

    இதனை வல்லுநர் குழுவினர் சதீஷ் குமார் சின்ஹா, (ஏ.வி.பி. சஸ்டைனபிலிட்டி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம்), சோலிஸ் இந்தியா டெக்னாலஜி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மகாதேவன், ஆசியா மற்றும் பசிபிக் பகுதி விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மைய ஆலோசகர் உகர்குவன் ஆகியோர் ஆய்வு செய்து எப்.எக்ஸ். கல்லூரி கண்டுபிடிப்புக்கு முதல் பரிசை அறிவித்தனர்.

    இதற்கு செஞ்சுரியன் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர் சுப்ரியா பட்டநாயக் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினார்.

    மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக எந்திரவியல் துறை பேராசிரியரும், வடிவமைப்பு அனாலிசிஸ் அப்ளைட் ஆய்வக பொறுப்பாளருமான கண்ணன் செயல்பட்டார். தேசிய அளவில் எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் ஹான்சன், அப்ளைட் லேப் தலைவர் லட்சுமி நாராயணன் மற்றும் மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • மாணவி லிஸ்பா நீளம் தாண்டுதல், 200 மீட்டர், 4x100 ரிலேயில் தங்கம் வென்றார்.
    • தாயம்மாள் மினி மாரத்தானில் வெள்ளி வென்றார்.

    நெல்லை:

    அண்ணா பல்கலைக் கழகம் மண்டலம் நெல்லை சார்பில் சிவகாசி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரியில் மகளிருக்கான மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன.

    இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லிஸ்பா நீளம் தாண்டுதல், 200 மீட்டர் மற்றும் 4x100 ரிலேயில் தங்கம் வென்றார்.

    மாணவி ஜெயா மிஸ்பா 400 மீட்டர் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர், 40x400 ரிலேவில் தங்கமும் வென்றார். மாணவி ஜென்னி மார்க்ஸ் 100 மீட்டரில் தங்கம் ,100 மீட்டர் தடை தாண்டுதல், 4x100 ரிலே ஆகியவற்றில் தங்கம் வென்றார்.

    தாயம்மாள் 5 ஆயிரம் மீட்டர், 4x400 மீட்டர் ஆகியவற்றில் தங்கம், மினி மாரத்தானில் வெள்ளி வென்றார். மாணவி போஜாக்ஸியோ 4x400 ரிலேவில் தங்கமும், மான்யா நீளம் தாண்டுதலில் வெள்ளியும், 4x100 ரிலேவில் தங்கமும் வென்றனர்.

    மாணவி காரிய லட்சுமி தேவி 100 மீட்டரில் வெண்கலமும், 100 மீட்டரில் வெள்ளியும், 4x100 ரிலே தங்கமும் வென்றார். இன்பான்ட் நிவானா 400மீட்டர், 800 மீட்டர், 4x400 ரிலேவில் தங்கமும் வென்றர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

    போட்டியில் வெற்றி பெற பயிற்சி அளித்த எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகரியா கேப்ரியல், உடற் கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், எஸ்தர் ராணி, நாராயணன் மற்றும் மாணவிகளை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் ப்ரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார் ஆகியோர் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தனர்.
    • மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண வர்கள் அறிமுக விழா நடை பெற்றது.

    இதில் ஸ்காட் கல்வி நிறுவனர் கிளிட்டஸ் பாபு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை ஸ்காட் குழும தாளாளர் பிரிய தர்ஷினி அருண் பாபு, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    கல்லூரி முதல்வர் வேல் முருகன் வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பேசுகையில், கல்லூரியில் பயிலும்போதே அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்ற நிகழ்வினையும், கல்லூரி நிர்வாகத்தின் சிறந்த கல்வி மற்றும் பேராசிரியர்கள் அளிக்கும் திறன் பயிற்சியை பற்றி எடுத்துரைத்தனர். அடுத்ததாக கல்லூரியின் ஆய்வகங்கள் மூலம் மாண வர்களுக்கு செயல் திறன் அளிக்கப்பட்ட அம்சங்களை யும் அவர்கள் எடுத்து கூறி னர்.

    பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார் ஆகியோர் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர், இங்கு மாணவர்க ளுக்கு பேராசிரி யர்கள் செயல்முறை பயிற்சியை அளிக்கிறார்கள். 4 ஆண்டு களில் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.வேலைவாய்ப்பு துறை இயக்குநர் முகமது சாதிக் கூறுகையில், எங்களது மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவ னங்களில் அளிக்கப்படும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராக மாறுவ தற்கும், வெளிநாடுகளில் உயர்கல்வி கற்ப தற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

    நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், 'எங்களது கல்வி நிறுவனத்தில் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் சிறந்த கல்வி, நவீன ஆய்வகங்கள் மூலம் நீங்கள் சாதிப்பதற்கு பேராசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள். மாணவர்கள் திறன் வளர்ச்சியை கற்பதன் மூலம் உயர்ந்த நிலையை அடையமுடியும். அதிக நேரம், கடினமாக உழைத் தால் தான் அதிக சம்பளம் பெற முடியும். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது என்றார்.

    முடிவில் எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் பிரிஸ்கா நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபால ராயன், திறன் பயிற்சி இயக்குநர் பாலாஜி, கல்விசார் பேராசிரியர் எல்.ஆர்.பிரியா, அப்ளைட் லேப் பொறுப்பாளர் லட்சுமி நாரா யணன் மற்றும் அனைத்து துறை பேராசிரி யர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேபிரியல் செய்திருந்தார்.

    • நெல்லை வண்ணார்பேட்டை பொறியியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு நடைபெற்றது.
    • ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    நெல்லை, ஜூன். 22-

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு நடைபெற்றது.

    சாதிக்க வேண்டிய பாதை

    ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மோட்டிவேஷன் அகாடமி சி.இ.ஓ. மற்றும் சர்வதேச மோட்டி வேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தரையில் இருந்து வானம் வரை படிப்பது தான் பொறியியல். கல்லூரியின் பொறியியல் துறை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வலியுறுத்தும் கருத்துக்கள், அவர்கள் சாதிக்க வேண்டிய பாதை, பெற்றோர்களை மதிப்பது போன்ற கருத்துக்களை பற்றி பேசினார்.

    குறும்பட தொகுப்பு

    மேலும் சர்வதேச அளவில் வாழ்வில் சாதனை படைத்தவர்களின் குறும் படத்தொகுப்பை மாண வர்களுக்கு காட்டினார். மாணவர்கள் முயற்சி, பயிற்சி, பேச்சு, மகிழ்ச்சி, வளர்ச்சி என்ற பயணத் தோடு வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து எப்.எக்ஸ். கல்லூரியில் சாதனை படைத்த கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் கடின உழைப்பு, சாதனை மற்றும் திறமை போன்றவற்றுக்கு மேடையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிழ்ச்சியில் இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி, இயக்குநர் முகமது சாதிக், திறன் மேம்பாட்டு துறை இயக்குநர் பாலாஜி, ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜஸ்டின், கல்விசார்துறை தலைவர் எல்.ஆர். பிரியா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில் பெங்களூரில் மாநாடு நடை பெற்றது.
    • கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், ‘இண்டஸ்ட்ரி ரெடி’ படிப்புகளை வழங்கியதற்காக விருது பெற்றார்

    நெல்லை:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோசில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் சிஸ்கோ நெட்வொர் க்கிங் அகாடமி தொழில் நுட்ப சேவையின் 25 ஆண்டை கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரில் மாநாடு நடை பெற்றது. அதில் இந்தியாவில் சிஸ்கோ நெட்வொ ர்க்கிங் அகாடமி கல்வி திட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கு மதிப்புமிக்க மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய கல்வி நிறுவனத்தின் சிஸ்கோ பயிற்றுவிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    இதில் நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியின் சார்பாக கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், 'இண்டஸ்ட்ரி ரெடி' படிப்புகளை வழங்கியதற்காக விருது பெற்றார். தமிழகத்தின் தென்மாவட்டத்திலேயே சிஸ்கோ விருதைப் பெற்ற ஒரே நிறுவனம் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி ஆகும்.

    இந்த விருது பெற ஊக்கமளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், விருது பெற்ற கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பினை பதிவு செய்து, கல்லூரி அரங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
    • முகாமில் எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் 200 பேர் தன்னார்வு பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியும், 'வி ஆர் யுவர் வாய்ஸ்' நிறுவனமும் இணைந்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.

    கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஸ்காட் கல்வி குழும இயக்குநர் ஜான் கென்னடி வரவேற்றார்.

    அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக கல்லூரி பொதுமேலாளர் கிருஷ்ண குமார் அப்துல்வகாப் எம்.எல்.ஏ.வுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    மேலும் ஸ்காட் நிர்மாண் சமூக சேவை நிறுவன மாற்றுத்திறனாளிகளின் படைப்புகளை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாராட்டினார். பின்னர் வாய்ஸ் நிறுவன இயக்குநர் காசிம் பாசித், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் முகமது சாதிக், ஆகியோர் பேசினர்.

    இதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பினை பதிவு செய்து, கல்லூரி அரங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.

    அவர்களது தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முகாமில் எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் 200 பேர் தன்னார்வு பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில், பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை இயக்குநர் ஞானசரவணன், திறன் மேம்பாட்டுத்துறை இயக்கு நர் பாலாஜி, ஸ்காட் நிர்மாண் திட்ட இயக்குநர் சார்லஸ், பிளாரென்ஸ் காது கேளாதோர் பள்ளி முதல்வர் ஜான்சன், நாட்டு நலப்பணி இயக்குநர் சுமன் மற்றும் வாய்ஸ் நிறுவன நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை எப்.எக்ஸ். கல்லூரி வளாக மேலாளர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, போத்தீஸ் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஸ்டார் கிட்ஸ் போட்டிகளை நடத்தியது
    • நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, போத்தீஸ் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஸ்டார் கிட்ஸ் போட்டிகளை நடத்தியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் எஸ்.கிளிட்டஸ் பாபு, போத்தீஸ் பொதுமேலாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

    விழாவில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், குழந்தைகளின் திறமையை வளர்க்க வும்,அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர எங்களது கல்லூரி பெருமுயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறன் வளர்வதற்கு இந்த ஸ்டார் நிகழ்ச்சி பயன்படுகிறது என்றார்.

    முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி பேசுகையில், மாணவர்கள் தங்கள் திறமைகளை பல்வேறு போட்டிகளின் மூலம் நிரூபித்து வெற்றி காண்கி றார்கள். இக்கல்லூரி மாணவர்கள் பெரிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து பிரதமர் பாராட்டை பெற்றுள்ளனர் என்றார்.

    தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில் ஓவியப் போட்டி, ரங்கோலி, கட்டுரை போட்டி, பாட்டு, நடன போட்டி, குழு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கல்லூரி பொது மேலாளர் கிருஷ்ண குமார், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா காபிரியேல் செய்திருந்தார்.

    • தை பொங்கல் திருநாளை முன்னிட்டு எப்.எக்ஸ். கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • பொங்கலிடும் போட்டியில் சிவில் துறை மாணவ, மாணவிகள் முதல் பரிசை வென்றனர்.

    நெல்லை:

    தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் பாரம்பரிய பட்டு சேலை, வேஷ்டி ஆடைகள் அணிந்து வந்தனர். கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அனைத்து துறையின் சார்பில் ரங்கோலி கோலப் போட்டி, மண்பானை ஓவிய போட்டி, நொங்கு வண்டி போட்டி, சைக்கிள் டயர் ஓட்டும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கபடி போட்டி, உறியடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன.

    விவசாயத்தின் அடையா ளமாக மாட்டு வண்டி, டிராக்டர்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

    இதனையடுத்து குத்துவிளக்கேற்றி, சூரியனுக்கு காய், கனிகள் படைக்கப்பட்டு பாரம்பரிய முறையில் பொங்கலிடப்பட்டது.

    பின்னர் அனைத்து துறை சார்பில் பொங்கலிடும் போட்டி நடைபெற்றன. இதில் சிவில் துறை மாணவ, மாணவிகள் முதல் பரிசை வென்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் மெக்கானிக்கல் துறை மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர்.

    விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும், சிலம்பாட்ட மும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், கணினித்துறை இயக்குநர் முகமது சாதிக், ஸ்காட் குழும இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி, வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் ஞானசரவணன், திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் பாலாஜி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    ×