என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய அளவில் வடிவமைப்பு போட்டி- நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை
- புனே டாசல்ட் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் துறையில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தேசிய அளவில் தயாரிப்பு வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.
- இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் இருந்து 245 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 1774 குழுக்களில், மொத்தம் 8870 மாண வர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
புனே டாசல்ட் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் துறையில் படைப்பாற்றல், புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பொறியியல் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல், புதிய தயாரிப்பு வடிவமைப்பு மூலம் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தேசிய அளவில் தயாரிப்பு வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் இருந்து 245 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 1774 குழுக்களில், மொத்தம் 8870 மாண வர்கள் கலந்து கொண்டனர். இதில் நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி எந்திரவியல் துறை மாணவர்கள் பிரவீன், மனோஜ்குமார், ஜோயல் ராஜ், லேவிஷ் பெஸ்ட்ஸ் க்ராஸ்ட்டென் ஆகியோர் பங்கேற்று பவர் ஜெனெரேஷன் குறித்த புதிய வடிவமைப்பு கண்டுபிடிப்பை சமர்ப்பித்தனர். குறைந்த காற்று வேகத்தில் கூட மின்சாரம் தயாரிக்கலாம் என்ற அடிப்படை அம்சத்தை வழங்கினர்.
இதனை வல்லுநர் குழுவினர் சதீஷ் குமார் சின்ஹா, (ஏ.வி.பி. சஸ்டைனபிலிட்டி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம்), சோலிஸ் இந்தியா டெக்னாலஜி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மகாதேவன், ஆசியா மற்றும் பசிபிக் பகுதி விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மைய ஆலோசகர் உகர்குவன் ஆகியோர் ஆய்வு செய்து எப்.எக்ஸ். கல்லூரி கண்டுபிடிப்புக்கு முதல் பரிசை அறிவித்தனர்.
இதற்கு செஞ்சுரியன் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர் சுப்ரியா பட்டநாயக் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினார்.
மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக எந்திரவியல் துறை பேராசிரியரும், வடிவமைப்பு அனாலிசிஸ் அப்ளைட் ஆய்வக பொறுப்பாளருமான கண்ணன் செயல்பட்டார். தேசிய அளவில் எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் ஹான்சன், அப்ளைட் லேப் தலைவர் லட்சுமி நாராயணன் மற்றும் மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்