search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G7 Countries"

    • இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.
    • சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று [ஜூன் 14] முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் வைத்து நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இத்தாலி சென்றுள்ளார்.

    இத்தாலியில் குழுமத்தொடங்கியுள்ள உலகத் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி இந்திய முறையில் நமஸ்தே சொல்லி வரவேற்கும் வீடியோ வைரலானது.

    இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.

    ஜி7 நாடுகளின் சக தலைவர்களான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரோன், ஆகியோருடன் நடந்து செல்லும்போது அவர்களை விட்டு தனியாக பிரிந்து கால் போன போக்கில் ஜோ பைடன் உலாவினார். பின்னர் அவரை இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் அனைவரும் இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தார்.

    முன்னதாக தன்னை வரவேற்ற மெலோனிக்கு பைடன் விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோ வைரலாக நிலையில் தற்போது கால் போன போக்கில் பைடன் உலாவும் வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அமேரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் விழித்துக்கொண்டே தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.

    ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தனது மகனை மன்னிக்க மாட்டேன் எனவும், சட்டப்படி என்ன நடந்தாலும் அதை ஏற்கிறேன் எனவும் பைடன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்குகொண்டுவர ஜோ பைடன் அழுத்தம் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. 

    ×