search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy A"

    சாம்சங் நிறுவனம் 70 நாட்களில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிவித்து இருக்கிறது.



    சாம்சங் நிறுவனம் 70 நாட்களில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிக கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் 100 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,000 கோடி) மதிப்பிலான வியாபாரம் செய்திருக்கிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி டாலர்கள் இலக்கை எட்ட முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது. கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களில் இருந்து மட்டும் ரூ.28,000 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டிருப்பதாக சாம்சங் பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது.



    “தற்சமயம் கேலக்ஸி ஏ சீரிசில் மொத்தம் ஆறு மாடல்களை விற்பனை செய்கிறோம். இவற்றுக்கு நாடு முழுக்க அமோக வரவேற்பு கிடைக்கிறது. கேலக்ஸி ஏ2 கோர் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனையாகிறது. 70 நாட்களில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறோம்,” என சாம்சங் இந்தியா மூத்த துணை தலைவர் மற்றும் மூத்த விளம்பர அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் தெரிவித்தார்.

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை பிடிக்க சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மற்றும் சாம்சங் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து கேலக்ஸி ஏ சீரிசில் ஒவ்வொரு மாதமும் புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது. 

    அந்த வகையில் வரும் வாரங்களில் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கும் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நாற்பது நாட்களில் சுமார் 20 லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. #Samsung



    சாம்சங் நிறுவனம் மார்ச் 1 ஆம் தேதி முதல் இதுவரை மட்டும் சுமார் 20 லட்சம் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் சுமார் ரூ.3,482 கோடிகளை வருவாயாக ஈட்டியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் இருந்து ரூ.27,700 கோடிகளை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.12,490 விலையில் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் நான்காவது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருந்தது. 

    மார்ச் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ10 ரூ.8,490 விலையிலும், கேலக்ஸி ஏ30 ரூ.16,990 விலையிலும், கேலக்ஸி ஏ50 ரூ.19,990 மற்றும் ரூ.22,990 விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மார்ச் 1 ஆம் தேதி துவங்கி சரியாக 40 நாட்களில் மொத்தம் 20 லட்சம் கேலக்ஸி ஏ மாடல்கள் - கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ10 உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.3,482 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என சாம்சங் இந்தியா மூத்த துணை தலைவர் ராஞ்சிவ்ஜித் சிங் தெரிவித்தார். 

    கேலக்ஸி ஏ சீரிஸ் மற்ற மாடல்கள் விற்பனைக்கு வரும் போது எங்களது இலக்கை அடைவோம் என அவர் மேலும் தெரிவித்தார். கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.25,000 - ரூ.30,000 என்றும் ரூ.45,000 - ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என சிங் தெரிவித்தார்.
    சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung


    சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் 2019 ஸ்மார்ட்போன்களில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா அமைப்பு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கொரிய வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இரண்டு பிரீமியம் அம்சங்களை வழங்குவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. இந்த மாடலில் டூயல் பிரைமரி கேமரா மற்றும் பின்புற கைரேகை சென்சார் வழங்குகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா சென்சார்களை வழங்க இருப்பதாக தி இன்வெஸ்டர் எனும் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று மூன்று கேமரா அமைப்பு கேலக்ஸி எஸ்10 மாடலிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் முதற்கட்டமாக இந்த அம்சம் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சாம்சங் மூன்று கேமரா செட்டப்: ஒரு லென்ஸ் வேரியபிள் அப்ரேச்சர், ஒரு சூப்பர்-வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்று கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இதே அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

    ஆனால் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் குறைந்தளவு திறன் கொண்ட இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #smartphone
    ×