search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy On6"

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஜூலை 2-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், தனது புதிய கேலக்ஸி ஆன் சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜுலை 2-ம் தேதி நடைபெறும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய கேலக்ஸி ஆன் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கென  பிரத்யேக வலைப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த பக்கத்தில் ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் நடிகர் டைகர் ஷ்ராஃப் விளம்பர தூதராக இருக்கிறார். மேலும் இதில் மூன்று டீசர் வீடியோக்கள் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஆன்6 என அழைக்கப்படும் என்றும் இதில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இத்துடன் கேலக்ஸி ஆன்6 மாடலில் சாட் ஓவர் வீடியோ அம்சம் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த அம்சத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வீடியோக்களை பார்த்து கொண்டே சாட் செய்ய முடியும். விலையை பொருத்த வரை புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி6 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ×