search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesh statue"

    • சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
    • விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறப்பட்டுள்ளதாவது:-

    களிமண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

    சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    சிலைகள் தயாரிக்க அல்ல பந்தல்களை அலங்கரிக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 70 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனை அடுத்து பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வடகரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பெரியகுளம் நகர் ஒன்றியத்தின் இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் பெரியகுளத்தின் முக்கிய வீதிகளான அரண்மனை தெரு, வி.ஆர்.பி தெரு, மற்றும் தென்கரை சுதந்திர வீதி, அக்ரகாரம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்பு பெரியகுளம் பாலசுப்ரமணி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர்பாண்டியன், மாநில ஊரக வளர்ச்சிப் பிரிவு துணைத்தலைவர் ராஜபாண்டியன், அதிமுக நகரமன்ற வழிகாட்டுதல் குழு தலைவர்சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையில் 4 துணைகண்காணிப்பாளர்கள், 6 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×