என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Ganesha Moola Mantra"
- நினைத்த காரியங்கள் நிறைவேற விநாயகர் வழிபாடு இன்றியமையாதது.
- துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.
முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற விநாயகர் வழிபாடு இன்றியமையாதது. அந்த வகையில் 16 செல்வங்களையும் தன் வசமாக்க விநாயகருக்கு உண்டான மூல மந்திரங்களை இப்பதிவில் காண்போம்.
கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் 'கணபதி உபாசகர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது. துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9218286-newproject1.webp)
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஜெபிப்பது மிக நன்று என கணேச உத்தரதாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடஹர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.
மாசி மாதம் வரும் சதுர்த்தி தொடங்கி, ஓராண்டு காலம் சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா'. இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.
செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜெபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும்.
செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது. வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரைச் சனி, அஷ்டமச் சனியிலிருந்து தப்பிக்கலாம்.
உச்சிஷ்ட கணபதி மந்திரம்
'ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய ஹஸ்தி முகாய,லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா'. வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.
கடன் தீர கணபதி மந்திரம்
'ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா'. கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்யும்போது, எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9218285-newproject2.webp)
மஹாஹஸ்தி விநாயகர், பெரிய தும்பிக்கையை கொண்டவர். இவர் பொருட்செல்வத்தை அள்ளி வீசுபவராக இருக்கிறார். அப்படி நமக்கு இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும். நமது பாவங்களும் தீரும். செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்து விடும்.
'ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய மஹாஹஸ்தி தக்ஷ்ணேன வாஞ்சா கல்பலதா கணபதி'. நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜெபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்ஸவிதர் வரேண்யம்கணபதயே க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு ஸஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா.'