என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "gay"
- சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
- கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.
சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, "அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மீதும் பல குற்றச்சாட்டுகளை அடிக்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டார்.
தொடர்ந்து, கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.
அதில், "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த..." என்று கார்த்திக் பேசுகிறார்.
சுசி லீக்ஸ் போலவே தற்போது அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை என்று கார்த்திக் குமார் விளக்கம் தெரிவித்தார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
சுசித்ராவை விவாகரத்து செய்த பிறகு, கார்த்திக் குமார் அம்ருதா என்கிற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில், சுசித்ரா கார்த்திக் குமார் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், வாழ்க்கை மிகவும் குறுகியது.. அது வாக்குவாதம் செய்வதற்கு அல்ல... ம*** போச்சு என்று சொல்லிவிட்டு.. அதை கடந்துவிட்டு போ என்றும்.. ஹாய் என் காதலே.." என்று கார்த்திக் குமாரை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.
- சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
- சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, "அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு சந்தேகம் இருந்தது உள்பட பல கருத்துக்களை கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாக கருதுகிறேன்.அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே" என்று கூறி உள்ளார்.
இந்நிலையில், கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில், "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த..." என்று கார்த்திக் பேசுகிறார்.
சுசி லீக்ஸ் போலவே தற்போது அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும் கார்த்திக்கின் பேச்சு தொடர்பாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை என்று கார்த்திக் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் இப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு, தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த ஆடியோவில் பேசியது கார்த்திக் குமார் தான் என கண்டறியும் பட்சத்தில் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
- இந்நிலையில், கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, "கார்த்திக்குமார் நண்பர்களுடன் அடிக்கடி மும்பை சென்று விடுவார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு சந்தேகம் இருந்தது உள்பட பல கருத்துக்களை கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாக கருதுகிறேன்.அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே" என்று கூறி உள்ளார்.
இந்நிலையில், கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில், "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த..." என்று கார்த்திக் பேசுகிறார்.
சுசி லீக்ஸ் போலவே தற்போது அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும் கார்த்திக்கின் பேச்சு தொடர்பாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை என்று கார்த்திக் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் இப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
- சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, "கார்த்திக்குமார் நண்பர்களுடன் அடிக்கடி மும்பை சென்று விடுவார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு சந்தேகம் இருந்தது உள்பட பல கருத்துக்களை கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாக கருதுகிறேன். அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே" என்று கூறி உள்ளார்.
இந்நிலையில், கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில், "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த..." என்று கார்த்திக் பேசுகிறார்.
சுசி லீக்ஸ் போலவே தற்போது அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும் கார்த்திக்கின் பேச்சு தொடர்பாக விமர்சித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
- ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.
வாஷிங்டன்
அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.
இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட்சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.
இது தான்அந்தச் சட்டம். இதைத் தான் கடந்த செப்டம்பர் 6-ந்தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘செல்லாது செல்லாது’ என தீர்ப்பு சொல்லி, ரத்து செய்துவிட்டது. இது ஏதோ, இன்று உச்ச நீதிமன்றம் உருவாக்கிவிட்ட புரட்சி அல்ல. 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இதே உத்தரவை பிறப்பித்துவிட்டது.
அன்று வெகுண்டு எழுந்த உச்ச நீதிமன்றம் இதே உச்ச நீதிமன்றம் தான் ஓரினச்சேர்க்கையை ஒழித்துக்கட்டியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவையும் 2013-ல் தூக்கி எறிந்தது. நாடாளுமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னது. அங்கு சசி தரூர், ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக ஒரு நபர் மசோதா கொண்டுவந்தார். அவருக்கு பின்னால் யாரும் நிற்கவில்லை. எனவே, அதை மக்களவை நிராகரித்தது.
இப்படியே போய்க்கொண்டு இருந்த கதை 2017-ல் ஒரு திருப்பத்தை சந்தித்தது. அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என வேறொரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சொல்லி வைத்தது. இதற்காகவே காத்திருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுடைய அந்தரங்கத்துக்காக அதாவது அடிப்படை உரிமைக்காக குரல் கொடுக்க, வந்துவிட்டது
இறுதியோ இறுதித் தீர்ப்பு. இதில் விசேஷம், ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த குரலில் தீர்ப்பு அளித்திருப்பது. யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. இனி ஆண்கள் ஆண்களோடு இருக்கலாம்; பெண்கள் பெண்களோடு இருக்கலாம். சட்டம், காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கின்றனர், இன்னும் வெள்ளைக்காரர்கள் காலத்து கருப்புக்கோட்டை கூட மாற்றாத நீதிபதிகள். ஓர் ஆணும் ஆணும் தனி அறையில் உல்லாசமாக இருப்பது, பிற பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ எந்தத் தீங்கையும் இழைக்காது என்பதால், அந்த ஆண்களின் தனிப்பட்ட விருப்புரிமை மதிக்கப்பட வேண்டும் என்பது தீர்ப்பின் சாராம்சம்.
இதே இந்திய தண்டனைச் சட்டத்தின் 494-வது பிரிவு, பலதார மணத்தை தடை செய்கிறது. ஏன் தடை செய்ய வேண்டும்? நான்கு பெண்கள் சம்மதித்தால், நான்பாட்டுக்கு குடித்தனம் நடத்திவிட்டு போகிறேன். இந்தச் சட்டத்துக்கு என்ன வந்தது? அப்புறம் ஏன், கணவனோ மனைவியோ உயிரோடு இருக்கும்போது, இன்னொரு திருமணம் செய்து கொண்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை என மிரட்டுகிறது? காலத்துக்கேற்ப மா(ற்)றிக்கொள்ள வேண்டியது தானே அந்தச் சட்டமும் நீக்கப்படுமா? தனி மனித சுதந்திரத்தைப் பொறுத்தவரை, சமூகம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்பதும் சுப்ரீம் கோர்ட்டின் சீரிய கருத்தே.
சமூக ஒழுக்கம் என்பது, ஒற்றை மனிதனின் உரிமையில் கூட தலையிட முடியாது என்பது தலைமை நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி கன்வில்கரின் வரிகள். சிறப்பு! அப்புறம் ஏன் குஜராத், பீகார் போன்ற மாநிலங்கள் மது குடிப்பதை சட்ட விரோதம் என அறிவித்துள்ளன? தமிழ்நாட்டில் ஆளாளுக்கு மதுவிலக்கு கொண்டு வருவோம் என அச்சுறுத்துகிறார்களே; முதல் கையெழுத்து போடுவோம் என மிரட்டுகிறார்களே; நீதிமன்றங்கள் இதை தட்டிக்கேட்க கூடாதா? நான் குடித்துவிட்டு குப்புறக் கிடப்பது, எந்த தனி மனிதனின் உரிமையில் தலையிடுவதாகும்?
கணவன்,மனைவி இருக்கும்போது இன்னொரு திருமணம் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. சரி, கணவன்,மனைவி இருக்கும் ஒருவர், பக்கத்து வீட்டுக்காரருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றமா? இல்லையா? இந்த இடத்தில் யாருடைய தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது?
விபசாரம், தனி மனித உரிமை பட்டியலில் இல்லையா? ஏன் இத்தனை வழக்குகள்? எத்தனை நடிகைகளின் வாழ்க்கை போனது, இத்தகைய வழக்குகளால்! யார் பொறுப்பு? கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், கையைக் காட்டி அழைத்தார் என்றெல்லாம் எழுதினார்களே, இதை விட அந்தரங்க உரிமை மீறல் வேறென்ன இருக்க முடியும்? உலகத்தின் எந்த மூலையிலும் மது இல்லாமல் இல்லை;
ஆனால், தமிழகத்தில் அதற்கான தடையை நீக்கிவிட்டு, கடையைத் திறந்துவிட்டதன் பலனை, யாராவது மனசாட்சி உள்ளவர்கள் மறுக்க முடியுமா? அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்று, தெருவெங்கும் நல்ல சாராயத்தை ஓட விட்டது தான் தீர்வா? முன்பெல்லாம் விஷச்சாராயம் குடித்து, ஆண்டுக்கு பத்து பதினைந்து பேர் தான் இறந்து கொண்டிருந்தார்கள். இன்று, நாட்டிலேயே அதிகம் சாலை விபத்து நடக்கும் மாநிலம் தமிழகம்.
அதற்கு காரணம் தெரிந்தது தான்; அதனால் தானே போராடினார்கள்.அப்படியே கண்டும் காணாமல் விட வேண்டியது தானே. சட்டமாக்கி, அதைச் சாதகமாக்கி ஏன் அவிழ்த்துவிட வேண்டும்? இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் கீழ் எத்தனை லட்சம் பேர் சிறையில் வாடினார்கள்? யார் இதுவரைக்கும் தண்டிக்கப்பட்டது? ஒருவரும் இல்லையே.. அப்புறமென்ன? எனவே இது போன்ற பின் விளைவுகளை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அழகிய சிங்கன்