search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GCW"

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் லேனிங் 41 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.
    • ஜெஸ் ஜோனாஸ்சன் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான லேனிங் 41 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். அலிஸ் கேப்சி 17 பந்தில் 27 ரன்களும், சதர்லேண்டு 12 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். குஜராத் டைட்டன்ஸ் வீராங்கனை மேக்னா சிங் 4 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 53 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஆஷ்லே கார்டனர் 31 பந்தில் 40 ரன்கள் அடித்தார். என்றாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாஸ்சன் 3 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    ஜெஸ் ஜோனாஸ்சன்

    இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 போட்டிகள் முடியவில் 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2-வது இடத்தையும், உ.பி. வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    ×