என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "General public"
- இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
- மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
பல மணி நேரம் தொடரும் மின் தடையால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர்கள்,முதியவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குத்தாலத்திலிருந்து பனங்குடி வரை காரை மேடு வழியாக மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து மின்கம்பிகளின் மீது படர்ந்து கிடப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 ரவுடிகளை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையை சேர்ந்த மணிகண்டன் (வயது 35), கிருஷ்ணகுமார் (22) என்பதும், இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள உள்ளதும், பிரபல ரவுடிகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கிருஷ்ணகுமார் ஆகிய 2 ரவுடிகளையும் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மையப்பகுதியில் அமைந்துள்ளது மஞ்சக்குப்பம் மைதானம். இந்த மஞ்சக்குப்பம் மைதானம் என்பது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு மிகவும் பரிச்சியமானது என அனைவரும் அறிந்ததாகும். மேலும் அனைத்து தலைவர்களின் கட்சிகளின் கூட்டமும் இந்த மைதானத்தில் நடைபெறுவது வழக்கம் கடலூர் மையப் பகுதியில் இந்த மைதானம் அமையப்பெற்றதால் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் இவ்வழியாக சென்று வருவதோடு மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மைதானத்தில் காற்றோட்டமாக அமர்ந்து பேசி செல்வது வழக்கம்.
இந்த மைதானம் அவர்களுக்கு மட்டும் ஏற்ற இடம் இல்லை. மது பிரியர்களான எங்களுக்கும் இந்த காற்றோட்டமான மைதானம் என்பது எந்தவித டென்ஷனும் இல்லாமல் அமைதியாக தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து குடிப்பதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது என்பதனை குறிப்பது போல் தினந்தோறும் குடிபிரியர்கள் இங்கு அமர்ந்து மது குடித்து சென்று வருகின்றனர் இதன் காரணமாக மஞ்சகுப்பம் மைதானத்தில் தற்போது மது பாட்டில்கள் அதிக அளவில் படர்ந்து சூழ்ந்து உள்ளன. மேலும் மைதானத்தில் வாகனத்தில் செல்பவர்கள் மது பாட்டில்களின் மீது ஏற்றி செல்வதால் மது பாட்டில்கள் முழுவதும் உடைந்து கண்ணடி துகள்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது மேலும் ஒரு சில மது பிரியர்கள் அதிக போதை காரணமாக மைதானத்தில் மது பாட்டில்களை உடைத்து வீசி செல்வதால் நடந்து செல்லும் பொது மக்களுக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருவதையும் காண முடிந்தது.
மேலும் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லக்கூடிய பெரும்பாலான மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகி பாதிப்பை உண்டாக்குவதும் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த மஞ்சகுப்பம் மைதானம் சுற்றியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் இருந்த போதிலும் மதுபிரியர்கள் தங்களுக்கான மைதானமாக மாற்றியது அனைவரையும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி யையும் ஆழ்த்தியுள்ளது.
ஆகையால் இரவு நேரங்களில் போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- தஞ்சையில் தனியார் நகைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்
- நகை கடை உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார்.
தஞ்சாவூா்:
தஞ்சை நகரில் மையப்பகுதியில் தனியார் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் வெளியிடப்பட்ட பல்வேறு சலுகைகள் கொண்ட அறிவிப்பை நம்பி ஏராளமான பொதுமக்கள் நகைகள் அடகு வைத்தும், சீட்டில் பணம் கட்டியும் வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த நகை கடை மூடப்பட்டது.
அதன் உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மதியம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்த நகைக்கடை முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். கடை உரிமையாளரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீங்கள் புகார் மனுவாக கொடுங்கள் . உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார்.
- சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. பொதுக்குழுவில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார்.
திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழுவில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி.க்கு கூடுதல் பதவியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைப் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்த ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் 2-வது முறையாக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
- விருத்தாசலத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
- தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர்:
விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திரா நகர் பகுதி மக்கள் நேற்று ஊர்வலமாக வந்து விருத்தாசலம் ஏ.எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர். ஆக்ரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் இருந்து, கோரிக்கை பாதாகைகளை ஏந்தி ஊர்வலமாக, விருத்தாசலம் போலீஸ் நிலையம் வந்தனர்.அங்கு ஏ.எஸ்.பி. அங்கித் ஜெயினிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் பல ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களது வீடுகளை இடிக்க கூடாது. மாற்று இடம் எதுவும் தங்களுக்கு இல்லாததால் போக்கிடம் செல்ல முடியாமல் பிள்ளை குட்டிகளோடு தவிப்பதாகவும், தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் எங்கள் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டும்.மேலும் அந்த தனிநபர் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என எங்களை மிரட்டி வந்தார், எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஏ.எஸ்.பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
- திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளர் ஜெகதீஷ் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரும்படியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.
- பஸ்களை சீராக இயக்க கோரி இன்று காலை தேவராயம்பாளையம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி தேவராயம்பாளையத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வராமல் தொடர்ந்து நாள்தோறும் காலதாமதமாக வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லமுடியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தேவாராயம்பாளையத்திற்கு 1G, 11B என இரண்டு அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் வருகிறது. அதில் 11B பேருந்துக்கு ஊழியர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதியில் பேருந்து வருவதில்லை. மேலும்,1G பேருந்து காலையில் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்வோர்களுக்கு ஏற்றவாறு இல்லாமல் ஒரு மணி நேரமும், இதேபோன்று மாலையில் அவிநாசியில் இருந்து 6.30மணிக்கு என நாள்தோறும் காலதாமதமாக வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதேபோன்று தனியார் பேருந்து, பயணிகள் குறைவு காரணமாக மாற்று வழித்தடத்தில் செல்கிறது. எனவே பஸ்களை சீராக இயக்க கோரி இன்று காலை தேவராயம்பாளையம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக வந்த பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களையும் மறித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவர் உறுதியை ஏற்று பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளர் ஜெகதீஷ் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரும்படியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்