என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு-தனியார் பஸ்களை சீராக இயக்க கோரி தேவராயம்பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
- திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளர் ஜெகதீஷ் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரும்படியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.
- பஸ்களை சீராக இயக்க கோரி இன்று காலை தேவராயம்பாளையம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி தேவராயம்பாளையத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வராமல் தொடர்ந்து நாள்தோறும் காலதாமதமாக வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லமுடியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தேவாராயம்பாளையத்திற்கு 1G, 11B என இரண்டு அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் வருகிறது. அதில் 11B பேருந்துக்கு ஊழியர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதியில் பேருந்து வருவதில்லை. மேலும்,1G பேருந்து காலையில் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்வோர்களுக்கு ஏற்றவாறு இல்லாமல் ஒரு மணி நேரமும், இதேபோன்று மாலையில் அவிநாசியில் இருந்து 6.30மணிக்கு என நாள்தோறும் காலதாமதமாக வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதேபோன்று தனியார் பேருந்து, பயணிகள் குறைவு காரணமாக மாற்று வழித்தடத்தில் செல்கிறது. எனவே பஸ்களை சீராக இயக்க கோரி இன்று காலை தேவராயம்பாளையம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக வந்த பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களையும் மறித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவர் உறுதியை ஏற்று பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளர் ஜெகதீஷ் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரும்படியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்