என் மலர்
முகப்பு » Geneva Motor Show
நீங்கள் தேடியது "Geneva Motor Show"
சாங்யோங் நிறுவனம் தனது கொரான்டோ எஸ்.யு.வி. மாடல் காரை ஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #KorandoSUV
கொரியாவைச் சேர்ந்த சாங்யோங் நிறுவனம் தனது புதிய மாடலாக அடுத்த தலைமுறை கொரான்டோ எஸ்.யு.வி. காரை ஜெனீவாவில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் சர்வதேச அளவில் பிரபலமான மாடல் டிவோலியை விட இது வடிவமைப்பில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனத்தின் கொரான்டோ இரண்டாம் தலைமுறை காரை விட இதில் அதிக இட வசதி உள்ளது. அதேபோல சவுகரியமான இடவசதி, புதிய வடிவிலான டேஷ் போர்டு, மிருதுவான இருக்கைகள் இந்தக் காருக்கு அழகு சேர்க்கின்றன.
இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டுள்ளது. இந்த மாடலைத் தொடர்ந்து இதே வடிவமைப்பில் பேட்டரி எஸ்.யு.வி. காரை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் எலெக்ட்ரிக் கார் 450 கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடிய வகையில் 61.5 கிலோவாட் பேட்டரி பேக் கொண்டிருக்கும் என்றும் இது 188 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சாங்யோங் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதனால் இந்நிறுவனம் தயாரிக்கும் மாடல்களின் வடிவமைப்பு பெரும்பாலும் இங்கு மஹிந்திரா நிறுவனம் தாயாரிக்கும் மாடல்களில் புகுத்தப்படும்.
மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்.யு.வி.300 மாடலில் பேட்டரி காரை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. சாங்யோங் தயாரிப்புகளை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன.
×
X