என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Georgia"
- ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணைய கட்டடத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரஷியவுக்கு நெருக்கமான நாடாக உள்ள ஜார்ஜியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி 53.93 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளது. ஜார்ஜியா தலைநகர் திப்லிசி [Tbilisi] - இல் உள்ள மத்திய தேர்தல் ஆணைய கட்டடத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகளை அறிவிக்கப்பட இருந்த நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த டாவிட் [Davit Kirtadze] என்ற தலைவர் திடீரென அனைவர் முன்னிலையிலும் தலைமை தேர்தல் ஆணையர் ஜியோர்ஜி [Giorgi Kalandarishvili] மீது கருப்பு மையை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Black paint is splashed into the face of Giorgi Kalandarishcili, Chairman of the Central Election Commission of Georgia as he was preparing to announce the final results of the October 26 parliamentary elections which both opposition and civil society consider fraudulent and not… pic.twitter.com/Z0ArxuWUPY
— Formula NEWS | English (@FormulaGe) November 16, 2024
- ஜார்ஜியா அணிக்காக பெனால்டி முறையில் கோல் அடித்தார்.
- இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ஜார்ஜியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டி துவங்கிய 2-வது நிமிடத்தில் ஜார்ஜிாய வீரர் விச்சா குவார்ட்ஸ்கெலியா (khvicha kvaratskhelia) முதல் கோலை அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது.
பிறகு போட்டியின் 57-வது நிமிடத்தில் மிகுடாட்ஸ் ஜார்ஜியா அணிக்காக பெனால்டி முறையில் கோல் அடித்தார். இதன் காரணமாக ஜார்ஜியா அணி 2-0 என்ற அடிப்படையில் போர்ச்சுகலை வீழ்த்தி வரலாற்று பெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் ஏற்கனவே போர்ச்சுகல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
எனினும், ஜார்ஜியா அணியின் வெற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் ரொனால்டோ துவங்கி வைத்த கால்பந்து பயிற்சி மையத்தில் சிறுவர்களாக பயிற்சி பெற்றவர்களில் ஒருவர்தான் குவார்ட்ஸ்கெலியா.
அன்று ரொனால்டோ துவங்கி வைத்த பயிற்சி மையத்தை சேர்ந்த சிறுவன் இன்று ரொனால்டோ அணிக்கு எதிரான போட்டியில் ஜார்ஜியா அணிக்காக விளையாடி உள்ளார். மேலும், தனது அணி வெற்றி பெறவும் காரணமாக விளங்கினார். இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதும் வென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு ஜார்ஜிய வீரர் குவார்ட்ஸ்கெலியா போர்ச்சுகவல் வீரரும், கால்பந்து ஜாம்வானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சியை வாங்கிக் கொண்டார். பிறகு, ரொனால்டோவின் ஜெர்சி மற்றும் ஆட்டநாயகன் விருது ஆகியவற்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அதற்கு "கனவு" என தலைப்பிட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன், "போட்டிக்கு பிறகு கிறிஸ்டியானோவிடம் அவரது ஜெர்சியை கேட்கலாமா? ஏன் கேட்க கூடாது? அவர் எனது ரோல்மாடல். அவரிடம் அதை தெரிவிப்பேன். இதனால் எங்களால் அவரை வீழ்த்த முடியாது என்றில்லை," என்று பதிவிட்ட குவார்ட்ஸ்கெலியோ நேற்றைய போட்டியில் வெற்றியை பெற்றதோடு ரொனால்டோவின் ஜெர்சியையும் வாங்கிக் கொண்டுள்ளார்.
- லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
- மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர்.
யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் துருக்கி மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் இளம் வீரர் அர்டா குலெர் லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் துருக்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்திய துருக்கி அணி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது.
இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 25-வது நிமிடத்தில் துருக்கியின் மெர்ட் முல்துர் வேகமாக அடித்த ஷாட் கோலாக மாறியது. மேலும், போட்டியில் துருக்கி அணிக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தது.
மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். இதன் காரணமாக ஜார்ஜியா அணி போட்டியன் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதையடுத்து போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த சமனில் இருந்தன.
போட்டியின் இரண்டாம் பாதி எந்த அணி இன்னொரு கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கியது. இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். முடிந்த வரை போட்டியில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த துருக்கி வீரர்கள், இடையில் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றும் முயற்சியிலும் இறங்கினர்.
அந்த வகையில், போட்டியின் 65-வது நிமிடத்தில் துருக்கி அணிக்காக களமிறங்கிய 19 வயது இளம் வீரர் அர்டா குலெர் யாரும் எதிர்பாரா நிலையில் கோல் அடித்தார். இதன் மூலம் துருக்கி அணி 2-1 என்ற வகையில் போட்டியில் முன்னிலை பெற்றது. போட்டி முடிவில் துருக்கி அணி 3 கோல்களை அடித்து இருந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் துருக்கி அணி 3-1 என்ற வகையில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் துருக்கி வீரர் அர்டா குலெர் கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். யூரோ கால்பந்து வரலாற்றின் அறிமுக போட்டியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை அர்டா குலெர் பெற்றிருக்கிறார்.
முன்னதாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 19 வயது 128 நாளில் முதல் கோல் அடித்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் கோல் அடித்த அர்டா குலெர் தனது 19 வது 114-வது நாளில் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
- ஜார்ஜியாவில் ஆளும் ஜார்ஜிய ட்ரீம் கட்சி “வெளிநாட்டுச் செல்வாக்கு” சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றியுள்ளது.
- ஜார்ஜியா மக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளை களங்கப்படுத்துகிறது.
வாஷிங்டன்:
கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையிலுள்ள பகுதியான தெற்கு காகசஸ் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில் வெளிநாட்டு செல்வாக்கு சட்ட மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவில் வெளிநாட்டிலிருந்து 20 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைப் பெறும் சில நிறுவனங்கள் தங்களை வெளிநாட்டுச் செல்வாக்கின் முகவர்களாகப் பதிவு செய்ய வேண்டும்.
நிதி சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டும். விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா பாணி சட்டம் என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் ஜார்ஜியா மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது:-
ஜார்ஜியாவில் ஆளும் ஜார்ஜிய ட்ரீம் கட்சி "வெளிநாட்டுச் செல்வாக்கு" சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றியுள்ளது. இதுகருத்துச் சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
ஜார்ஜியா மக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளை களங்கப்படுத்துகிறது. சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. அமைதியான எதிர்ப்பை ஒடுக்க வன்முறை பயன்படுத்தப்படுகிறது. எனவே ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டுடனான உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருகிறது. புதிய விசா கொள்கையானது "ஜார்ஜியாவில் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு பொறுப்பான அல்லது உடந்தையாக இருக்கும் நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பொருந்தும்.
அமெரிக்கா- ஜார்ஜியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்ய அமெரிக்கா தொடங்குகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்