search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gita Mehta"

    • ஒடிசா முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார்.
    • அவரது சகோதரியான கீதா மேத்தா டெல்லியில் காலமானார்.

    புதுடெல்லி:

    பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா (80), நேற்று புதுடெல்லியில் காலமானார்.

    இந்நிலையில், மறைந்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியான கீதா மேத்தாவின்குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில், பிரபல எழுத்தாளர் ஸ்ரீமதி கீதா மேத்தா ஜி அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு பன்முக ஆளுமையாக இருந்தார், அவருடைய அறிவுத்திறன் மற்றும் எழுத்து மற்றும் திரைப்படத் தயாரிப்பின் மீதான ஆர்வத்திற்காக அறியப்பட்டார். அவர் இயற்கை மற்றும் நீர் பாதுகாப்பிலும் ஆர்வமாக இருந்தார். துக்கத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் நவீன் பட்நாயக் மற்றும் முழு குடும்பத்துடன் உள்ளன. ஓம் சாந்தி" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik
    புவனேசுவரம்:

    மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று கீதா மேதா அறிவித்து உள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் அவர், இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், “பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர் என கருதி மத்திய அரசு என்னை தேர்ந்தெடுத்து கவுரவித்து இருக்கிறது. ஆனால் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். இதனால் எனக்கும், அரசுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், விருதை நான் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik

    ×