என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "glasses"
- புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும்.
- கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்கக் கூடாது.
தற்போது பலரும் கணினியில் நீண்டநேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் கண் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் எதிலெல்லாம் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
போதுமான அளவு தூக்கம்:
கண் ஆரோக்கியத்துக்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டு. நாம் விழித்திருக்கும் போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது.
போதுமான தூக்கம் இல்லாதது, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள் கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்.
பாதுகாப்பு கண்ணாடிகள்:
நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும். அதேநேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாசின் லென்சுகள் 99 முதல் 100 சதவீதம், புற ஊதா ஏ, புற ஊதா பி கதிர்களை தடுக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
கைகளால் கண்களை தேய்க்காதீர்கள்:
கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்கக் கூடாது. அதனால், உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், கைகளால் அழுந்த தேய்க்கும்போது அது சேதம் அடையும் வாய்ப்புள்ளது.
வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி, துகள் போன்றவை கண்களில் படுவதற்கு முன்னர் கழுவிவிட வேண்டும். இதன்மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.
நீரேற்றம், உணவுமுறை:
உடலில் நீரிழப்பு இருக்கும் போது உடல் வறட்சி ஏற்பட்டு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும். குறிப்பாக ஒமேகா 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால் கண்களை பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.
கணினி பார்க்கும் சரியான முறை:
கணினி அல்லது மடிக்கணினி திரை. உங்கள் கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும் கண் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கணினியில் நீங்கள் பணிபுரியும்போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்ய வும். அதேநேரம், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினை வில் கொள்ளுங்கள்.
கண்களின் பாதிப்பை தடுக்கும் விதிமுறை:
கணினியில் பணிபுரியும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு, உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்தும்.
இவை எல்லாவற்றுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்