என் மலர்
நீங்கள் தேடியது "Glenn McGrath"
- இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
- ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
பேட்டிங் வரிசையில் ஒவ்வொருவரும் ரன்கள் குவிக்க வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேஞ்ச் ஆகிய வீரர்களை மட்டுமே ஆஸ்திரேலியா நம்பியுள்ளது. இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பது குறித்த கேம் பிளானில் அவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் அதிக ரன்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் முதல் 2 டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய மைதானங்களில் எப்படி ஆட வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு நன்கு தெரியும். இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடையாமல் இருந்தாலே அது ஆஸ்திரேலியா செய்யும் சாதனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
என்று மெக்ராத் கூறியுள்ளார்.
- ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி என மெக்ராத் கூறினார்.
- இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள் என மைக்கெல் வாகன் கூறினார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 16-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. நூற்றாண்டு கால பழமைவாய்ந்த ஆஷஸ் தொடரில் இந்த முறை ஆஸ்திரேலியா முழுமையாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமாக விளையாடி வரும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி. இது நம்ப முடியாத ஒரு போட்டித்தொடராக இருக்கப்போகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிவு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பான தொடக்கம் அமைய வேண்டியது அவசியம். ஒவ்வொரு டெஸ்டும் கடைசி வரை பரபரப்பாக நகர்ந்து, அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதை பார்க்க முடியும் என்று நம்புகிறேன். தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் என்பதே எனது கணிப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்,
2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை. கிட்டத்தட்ட இதே அணி வீரர்களுடன் கடைசியாக 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆடிய போது அவர்களால் 2-2 என்று தொடரை சமன்தான் செய்ய முடிந்தது. இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள். தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும்.
இவ்வாறு வாகன் கூறினார்.
- துடைப்ப குச்சியால் மெக்ராத் பாம்பின் தலை மற்றும் வாலை பிடித்து கொண்டு அதனை வீட்டிற்கு வெளியில் கொண்டு செல்லும் காட்சிகள் உள்ளது.
- வீட்டுக்குள் நுழைந்த ராட்சத வண்டுகளை தனது மனைவி சாரா லியோன் உதவியுடன் பிடித்து வெளியே விட்டதாகவும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் வீட்டுக்குள் புகுந்த ஆபத்தான மலைபாம்பை துணிச்சலுடன் பிடித்து அசத்தி உள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான கிளன் மெக்ராத்.
இவரது வீட்டுக்குள் மலைபாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். எனினும் மெக்ராத் வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப்பை வைத்து அந்த மலைபாம்பை சாதுர்யமாக பிடித்து அப்புறப்படுத்திய காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அதில் துடைப்ப குச்சியால் மெக்ராத் பாம்பின் தலை மற்றும் வாலை பிடித்து கொண்டு அதனை வீட்டிற்கு வெளியில் கொண்டு செல்லும் காட்சிகள் உள்ளது. ஏற்கனவே வீட்டுக்குள் நுழைந்த ராட்சத வண்டுகளை தனது மனைவி சாரா லியோன் உதவியுடன் பிடித்து வெளியே விட்டதாகவும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த சில தொடர்களில் அவரால் போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை.
- அதிக ரன்கள் குவிக்காததால் கோலிக்கு இந்த தொடரில் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் கிளென் மெக்ராத் கூறியதாவது:-
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே சவால் நிறைந்ததாக இருக்கும். இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் ரன் குவிப்பது கடும் சவாலாக இருக்கும்.
தற்போதுள்ள வீரர்களில் விராட் கோலி மிகச் சிறந்தவர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் எனக்கு தெரிந்தவரை அவர் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறார். கடந்த சில தொடர்களில் அவரால் போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை. அதிக ரன்கள் குவிக்காததால் கோலிக்கு இந்த தொடரில் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் முதல் 2 இன்னிங்ஸ்களில் அவர் குறைந்த ரன்னை எடுத்தால் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தொடர் முழுவதுமே அவரால் சிறப்பாக ஆட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.
இந்த பிரச்சினையை நிச்சயம் கோலியும் உணர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். அவரது மன உறுதியை உடைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக விமர்சனங்களை வைக்கலாம். களத்தில் அவருடன் வாக்குவாதத்திலோ அல்லது மோதலிலோ ஈடுபட்டால், அவரால் அதிக ரன் குவிக்க வாய்ப்புகள் இருக்கிறது. கோலி ஒரு உணர்ச்சிப்பூர்வமான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது மிகவும் உச்சத்தில் இருப்பார்.
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தம் இருப்பது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால் தொடக்கம் முதலே திட்டங்களுடன் இந்திய அணியை பலவீனமடைய செய்தால், ஆஸ்திரேலியாவால் எளிதாக தொடரை கைப்பற்ற முடியும்.
எனவே இந்த தொடர் இந்தியாவுக்கு மிகவும் சவாலான தொடர்தான். அதே நேரத்தில் இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இருப்பதால் ஆஸ்திரேலியாவும் பொறுப்புடன் விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் விராட் கோலி 34 டெஸ்டில் 31.68 ரன் சராசரியுடன் 1,838 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் மொத்தமாக 118 டெஸ்டில் 9,040 ரன்களை குவித்துள்ளார். சராசரி 47.83 ஆகும். ஆஸ்திரேலியாவுடன் 25 டெஸ்டில் ஆடி 2,042 ரன்களை எடுத்து உள்ளார். அந்த அணிக்கு எதிராக ஓர் இன்னிங்சில் அதிகபட்சமாக 186 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

564 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுக்கள் வீழ்த்துவார் என்று மெக்ராத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் என்னைவிட மெக்ராத் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெல் ஸ்டெயின் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நான் மெக்ராத்தை பற்றி சில விஷயங்களை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அவர் என்னைவிட சிறந்த பந்து வீச்சாளர். இது தவறான தன்னடக்கம் இல்லை’’ என்றார்.
