என் மலர்
நீங்கள் தேடியது "Goa Airport"
- இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா?
- இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இந்தி பேசாதவர்
இந்தியர் இல்லை என்று
அரசமைப்பில் இருக்கிறதா?
இந்தியா என்ற நாடு
இந்தி என்ற
சொல்லடியில்தான் பிறந்ததா?
எல்லா மாநிலங்களிலும்
புழங்குவதற்கு
இந்தி மொழியென்ன
இந்தியக் கரன்சியா?
இந்தி பேசும் மாநிலங்களிலேயே
இந்தி கல்லாதார் எண்ணிக்கை
எவ்வளவு தெரியுமா?
வடநாட்டுச் சகோதரர்கள்
தமிழ்நாட்டுக்குள் வந்தால்
தமிழ் தெரியுமா என்று
தெள்ளு தமிழ் மக்கள்
எள்ளியதுண்டா?
சிறுநாடுகளும்கூட
ஒன்றுக்கு மேற்பட்ட
ஆட்சிமொழிகளால்
இயங்கும்போது
இந்தியாவை
ஓர் ஒற்றை மொழிமட்டும்
கட்டியாள முடியுமா?
22 பட்டியல் மொழிகளும்
ஆட்சிமொழி ஆவதுதான்
வினாத் தொடுத்த காவலர்க்கும்
விடைசொன்ன
தமிழச்சிக்குமான ஒரே தீர்வு
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
இந்தி பேசாதவர்இந்தியர் இல்லை என்றுஅரசமைப்பில் இருக்கிறதா?இந்தியா என்ற நாடுஇந்தி என்றசொல்லடியில்தான் பிறந்ததா?எல்லா மாநிலங்களிலும்புழங்குவதற்குஇந்தி மொழியென்னஇந்தியக் கரன்சியா?இந்தி பேசும் மாநிலங்களிலேயேஇந்தி கல்லாதார் எண்ணிக்கைஎவ்வளவு தெரியுமா?வடநாட்டுச்…
— வைரமுத்து (@Vairamuthu) December 15, 2023
- பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா.
- விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார்.
"தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?
பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர்…
— M.K.Stalin (@mkstalin) December 14, 2023