என் மலர்
நீங்கள் தேடியது "Goa"
- ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
- ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஆட்டோ ஓட்டுநர் அறைந்த சிறிது நேரத்தில் கோவா முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வேலை நிமித்தமாக கோவாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லாவு மம்லதார் (68) சென்றிருந்தார்.
நேற்று அவரது கார் கார் காதேபஜார் அருகே ஒரு ஆட்டோவுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. மோதிய பின்னர் அவர் தனது காரில் அவர் தங்கியிருந்த ஸ்ரீனிவாஸ் லாட்ஜ் நோக்கிச் சென்றார்.
ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை ஆட்டோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, மம்லதார் லாட்ஜ் படிக்கட்டுகளில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு அங்கிருத்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
லாவு மம்லதார், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சார்பில் (எம்ஜிபி) 2012-2017 வரை கோவா எம்எல்ஏவாக இருந்தார். 2022 இல் காங்கிரசில் சேர்ந்தார். அதே ஆண்டு மட்காய் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- கோவா பாஜகவில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்தனர்.
- காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது.
பனாஜி:
கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தலைமையில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதையடுத்து அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜகவில் இணைந்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவா மாநில முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் கூறியுள்ளதாவது: காங்கிரசில் தலைமை எங்கே இருக்கிறது? தலைமை இருந்திருந்தால், 2017 ஆண்டு 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்த போது நாங்கள் ஆட்சி அமைத்திருப்போம்.
திடீரென என்னிடம் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கி விட்டார்கள்.இது நியாயமா? என்னை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பாகும்.
ஒரு முடிவெடுக்கணும்னு நினைச்சப்போ, நான் கோவிலுக்குப் போனேன், என் தொண்டர்கள் கோபமா இருக்காங்க, இனி காங்கிரசுக்கு வேலை செய்ய வேண்டாம்னு எனக்கு சாதகமாக கோவில் பிரசாதம் வந்திருக்கு. நான் அவர்களிடம் (ஆதரவு எம்எல்ஏக்கள்) உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுங்கள், நான் உங்களுக்கு ஆதரவளிக்கிறேன் என்று தெரிவித்தேன். இப்போது காங்கிரஸ் கட்சியில் எதுவும் மிச்சமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல், கோவாவில் ஆபரேஷன் கிச்சாட் மூலம் எம்எல்ஏக்களை பாஜக மாற்றியுள்ளாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
- ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை.
- கோவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கம்.
கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 25 சட்டசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.
இன்று அம்மாநில மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவா எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக் மற்றும் ராஜேஷ் ஃபல்தே சாய் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவா மாநிலத்திற்கு சென்று அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்குமாறு அக்கட்சியின் எம்.பி முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நீக்கி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் சதித்திட்டத்தை மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தீட்டியதாக கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டி உள்ளார்.
கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது ஜனநாயகம் அல்ல, பண நாயகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்து காங்கிரஸ் எம்எஏக்கள், மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வழக்குகளை எதிர்கொள்கிறார்களா என்பது குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கோவா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா நேற்று முன் தினம் மாலை பனாஜி கடற்கரைக்கு சென்றார். கடலை பின்னணியாக கொண்டு அவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்க போராடினர். சற்று நேரத்தில் ரம்யா கிருஷ்ணா கடலுக்குள் மூழ்கினார். அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் தேடி வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகாவில் இருந்து வந்த பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.
அப்போது அந்த நபர், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை உடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட தங்க பேஸ்ட் 1.16 கிலோ கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 36,99,782 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Hyderabadcustomsaction #Manarrested

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
