என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "government jobs"
- ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணி தொடங்கப்படும்.
- ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ₹ 8,500 டெபாசிட் செய்யப்படும்.
காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் ஒரு வாக்கு இந்தியாவில் நிகழும் அநீதிகளையும், அடக்குமுறைகளையும் அகற்றும்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணி தொடங்கப்படும்.
ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ₹ 8,500 டெபாசிட் செய்யப்படும்.
இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் முதல் வேலை வழங்கப்படும்.
அரசியலமைப்பு காக்கப்பட்டு, உரிமைகள் மீட்கப்படும்.
உங்களின் சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாப்பதன் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான, இடஒதுக்கீடு நியாயமான முறையில் கிடைக்கப்பெறும்.
நீர், நிலம், வனம் மீதான பழங்குடியினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
நீங்கள் இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள் என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
இன்றும் மூன்றில் ஒரு பெண் மட்டுமே ஏன் வேலை செய்கிறார்? 10 அரசு வேலைகளில் ஒரு பெண் மட்டும் ஏன்?
இந்திய மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதம் இல்லையா?
மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் பெண்களின் பங்கு 50 சதவீதம் இல்லையா? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது?
மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.
பெண்களுக்கு சமமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள்.
50 சதவீத அரசுப் பதவிகளில் பெண்களைக் கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும். பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள் என தெரிவித்தார்.
- ஓய்வூதியதாரர்களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
- ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ்தள பதிவில் இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.
பாரதிய ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் இந்த தடவை தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், பொதுமக்களிட மும் கருத்துக்கள் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது.
ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நேற்று டெல்லியில் இறுதி கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
இன்று (செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாக ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி யது. இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.
இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிக்கையில் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு-குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது பற்றியும், சாதிவாரி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும்.
இவை தவிர அரசு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.
எனவே இதன் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு வேலை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
- வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.
- கல்வித்துறையில் 1,847 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
துறைவாரியாக பணி நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.
நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக் கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.
அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்களுக்கு பல்லாயிரக் கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது.
இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
- ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது கல்விச்சூழலுக்கு மேலும் உதவிடும்.
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
தமிழகத்தில் வயது தளர்வு அளித்துள்ளதை போல ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் தற்போது அறிவித்துள்ள வயது வரம்பில் மேலும் 3 வயதை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது கல்விச்சூழலுக்கு மேலும் உதவிடும். பாகுபாடு நிறைந்த சமூக ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலுக்கு உள்ளாகி உள்ள பெண்கள் அதிகாரம் பெறவும், முன்னேறவும் அரசு வேலை வாய்ப்பில் சிறப்பு சலுகையை உறுதி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு சிறப்பு கூறு நிதியத்தை முறைப்படுத்தி செயல்படுத்திட விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். அது குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கூட்டத்தை நடத்த அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
- இலவச பயிற்சி வகுப்புகளும் மற்றும் அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது
கடலூர்:
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் மற்றும் அத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு களும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வு வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல்நிலை தேர்விற்கான பாடவாரியான மற்றும் முழு மாதிரி தேர்வுகள் 17- ந்தேதி முதல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தேர்வாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு 9-ந் தேதி முதல் 16-ந் ேததி வரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.குரூப் 1, குரூப் 2 தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கள் இம்மாதிரி தேர்வுகளில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
- அமைச்சக ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
- படித்த இளைஞர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தூண்டுகிறார்.
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முத்தியால்பேட்டை யில் உள்ள விஜிலென்ஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அமைச்சக உதவியாளர் பணிக்கான நியமன விதி 2012-ல் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது.
அப்போதைய பணி யாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள் தவறுதலாக அளித்த தகவல்களால் 20 சதவீதம் பணியிடங்கள் நேரடி நியமனம், வெளிமாநிலத்தினர் பங்கு பெறும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த நியமன விதிகளுக்கு அமைச்சக ஊழியர்கள், அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏனெனில் உதவியா ளர்கள் நேரடி நியமனத்தில், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது.
எல்.டி.சி., யூ.டி.சி.க்கு அடுத்தபடியாக உள்ள உதவியாளர் பதவியை நேரடி நியமனம் மூலம் நிரப்பினால் தேக்க நிலை ஏற்பட்டு, வரும்காலத்தில் மண்ணின் மைந்தர்களான புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும்.
அரசு நிர்வாகத்தில் முக்கிய பதவியான உதவி யாளர் பதவியை அனுபவம் வாய்ந்த யூ.டி.சி.க்களை கொண்டு நிரப்பினால்தான் நிர்வாகம் செம்மையாக இருக்கும். ஊதியக்குழு பரிந்துரையில் குறிப்பிட்டு ள்ளது போல 3-ம் நிலையில் நேரடி நியமனத்தை கைவிட வேண்டும்.
தற்போது 116 யூ.டி.சி. காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வெளி யிட்டுள்ளது. இதோடு 600 யூ.டி.சி.க்களை உதவியா ளர்களாக பதவி உயர்த்தி னால் இந்த காலி பணியிட எண்ணிக்கை 716 ஆக உயரும்.
இதன்மூலம் 716 யூடிசி பணியிடங்களில் வேலை யில்லா பட்டதாரி இளைஞர்கள் மூலம் நிரப்ப வாய்ப்பு ஏற்படும். மேலும் 2 ஆண்டு வயது வரம்பு குரூப் சி பதவியில் அளிக் கப்பட்டுள்ளதால் அரசு வேலைவாய்ப்பு கிடைப்பது பிரகாமாக உள்ளது.
எனவே உதவியாளர் பதவியை 7 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் யூ.டி.சி.க்களை கொண்டு சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
புதுவை பொதுப்பணித் துறையில் பணியாற்றும் நபர் நேரடி நியமனத்தை ஊக்குவிக்கிறார். இவர் வேலைவாயப்பு பயிற்சி மையத்தை நடத்தி வரு வதால் தனக்கு சாதகமாக படித்த இளைஞர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தூண்டுகிறார்.
அப்பாவி இளைஞர்கள் உண்மை நிலையை அறி யாமல் அவரின் தூண்டு தலுக்கு பலியாகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்சில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்