search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை இளைஞர்களுக்கு அரசு வேலை பறிபோகும்
    X

    அமைச்சக ஊழியர்கள் விஜிெலன்ஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்க வந்த போது எடுத்தபடம்.

    புதுவை இளைஞர்களுக்கு அரசு வேலை பறிபோகும்

    • அமைச்சக ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
    • படித்த இளைஞர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தூண்டுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முத்தியால்பேட்டை யில் உள்ள விஜிலென்ஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அமைச்சக உதவியாளர் பணிக்கான நியமன விதி 2012-ல் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது.

    அப்போதைய பணி யாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள் தவறுதலாக அளித்த தகவல்களால் 20 சதவீதம் பணியிடங்கள் நேரடி நியமனம், வெளிமாநிலத்தினர் பங்கு பெறும் வகையில் உருவாக்கப்பட்டது.

    இந்த நியமன விதிகளுக்கு அமைச்சக ஊழியர்கள், அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஏனெனில் உதவியா ளர்கள் நேரடி நியமனத்தில், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    எல்.டி.சி., யூ.டி.சி.க்கு அடுத்தபடியாக உள்ள உதவியாளர் பதவியை நேரடி நியமனம் மூலம் நிரப்பினால் தேக்க நிலை ஏற்பட்டு, வரும்காலத்தில் மண்ணின் மைந்தர்களான புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும்.

    அரசு நிர்வாகத்தில் முக்கிய பதவியான உதவி யாளர் பதவியை அனுபவம் வாய்ந்த யூ.டி.சி.க்களை கொண்டு நிரப்பினால்தான் நிர்வாகம் செம்மையாக இருக்கும். ஊதியக்குழு பரிந்துரையில் குறிப்பிட்டு ள்ளது போல 3-ம் நிலையில் நேரடி நியமனத்தை கைவிட வேண்டும்.

    தற்போது 116 யூ.டி.சி. காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வெளி யிட்டுள்ளது. இதோடு 600 யூ.டி.சி.க்களை உதவியா ளர்களாக பதவி உயர்த்தி னால் இந்த காலி பணியிட எண்ணிக்கை 716 ஆக உயரும்.

    இதன்மூலம் 716 யூடிசி பணியிடங்களில் வேலை யில்லா பட்டதாரி இளைஞர்கள் மூலம் நிரப்ப வாய்ப்பு ஏற்படும். மேலும் 2 ஆண்டு வயது வரம்பு குரூப் சி பதவியில் அளிக் கப்பட்டுள்ளதால் அரசு வேலைவாய்ப்பு கிடைப்பது பிரகாமாக உள்ளது.

    எனவே உதவியாளர் பதவியை 7 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் யூ.டி.சி.க்களை கொண்டு சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

    புதுவை பொதுப்பணித் துறையில் பணியாற்றும் நபர் நேரடி நியமனத்தை ஊக்குவிக்கிறார். இவர் வேலைவாயப்பு பயிற்சி மையத்தை நடத்தி வரு வதால் தனக்கு சாதகமாக படித்த இளைஞர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தூண்டுகிறார்.

    அப்பாவி இளைஞர்கள் உண்மை நிலையை அறி யாமல் அவரின் தூண்டு தலுக்கு பலியாகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்சில் புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×