search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government School parents"

    செங்குந்தபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பெற்றோர்கள் ஆசிரியர் கழகத் தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் அசோகன் சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் வேலுமணி தீர்மானங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

    முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் புதிய தலைவராக கீதா தேர்ந்தெடுக்கபட்டார். கூட்டத்தில் ஆசிரியர்கள், ஏராளமான பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×