என் மலர்
நீங்கள் தேடியது "govt order"
- மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
- 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய முதுநிலை படிப்பு மொத்த இடங்கள் 2,100 உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை மேற்படிப்புக்கு பல கோடி செலவிட வேண்டிய நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 'நெஸ்ட்' தேர்வு மூலம் சேர தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்லது.
மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து முடிக்கும் போது, இதுவரையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி மூப்பு காலம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு காலம் 60 வயது என மாற்றப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் கடைசி பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறையும் ஏற்கனவே உள்ளது.
இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '55 வயது உள்ள மருத்துவர் முதுநிலை படிப்பில் இதன்மூலம் சேர முடியும். 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும். இது முன்பு ஓய்வு பெறும் வயதில் இருந்து 2 ஆண்டுமுன்பு வரை முதுநிலை மருத்துவபடிப்பில் சேரலாம் என இருந்தது. அதில் மாற்றம் செய்து புதிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.
- பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
- பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.
பெங்களூரு:
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஓலா, ஊபர், ரேபிடோ என்ற பெயரில் பைக் டாக்சிகள் கர்நாடகாவில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கு வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக குற்றம் சாட்டினர்.
பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு போக்குவரத்து துறை கர்நாடகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்ட உத்தரவில் பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்த உத்தரவை ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், பெண்கள் வரவேற்றுள்ளனர்.
- நெல்லை, மதுரை மாவட்டங்கள் உள்பட 6 துணை கலெக்டர்கள் இடமாற்றம்
- சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி, சேலம் ஆவின் பொது மேலாளராக நியமனம்
தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்:
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவின் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒருங்கிணைக்க மாவட்ட வருவாய் அதிகாரியாக திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரெயில் நில எடுப்பு பிரிவின் மாவட்ட வருவாய் அதிகாரி சத்தியநாராயணன் சேலம் ஆவின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று 19 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், நெல்லை, மதுரை, சேலம், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6 துணை கலெக்டர்களை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பிளாஸ்டிக் தடை ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உடனடியாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் தடை விதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இக்கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PlasticBan #TN
