search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grass"

    தஞ்சை பெரிய கோவிலில் உள்ள புல் தரையில் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள தரை விரிப்புகள் மீது தண்ணீர் பாய்ச்சி குளுமையாக வைக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது தஞ்சையில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் அடிக்கிறது.

    100 டிகிரியை தாண்டி அடிக்கும் வெப்பத்தால் பெரிய கோவில் வளாகத்தில் உள்ள கருங்கல் தரைகளில் நடப்பதற்கு சுற்றுலா பயணிகள் கஷ்டப்பட்டனர். இதை போக்குவதற்கு வளாகத்தில் அனைத்து புறங்களிலும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி குளுமையாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மேட்டில் நடந்து செல்லும்போது வெப்பத்தின் தாக்கம் தெரியவில்லை. இதேப்போல் அங்குள்ள புற்கள் வெயிலால் அடிக்கடி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டது. இதை தடுக்க புல் தரையிலும் தண்ணீர் தெளித்து பராமரிக்கப்படுகிறது.

    மேலும் புற்கள் சீராக வளர்வதற்கு அடிக்கடி அதனை எந்திரம் மூலம் மட்டமாக்கும் பணியும் நடந்து வருகிறது. இப்படி செய்வதால் புற்கள் சீராகவும், பசுமையாகவும் வளர்கிறது. இந்த பணி வெயில் காலத்தில் மட்டுமில்லாமல் அனைத்து காலங்களிலும் தொடர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் விருப்பமாகும்.

    ×