என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "green card"
- கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். கிரீன் கார்டை பெற லட்சக்கணக்கானோர் காத்து இருக்கிறார்கள். கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுமதி செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் அதிகபட்சம் செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் துறை அறிவித்துள்ளது. கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த மாதம் 22-ந் தேதி அல்லது அதற்கு பிறகு நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட தகுதியான வேலை வாய்ப்பு அங்கீகார ஆவண விண்ணப்பங்களுக்கு இந்த புதிய கொள்கை பொருத்தும்.
இது அமெரிக்காவில் எச்.1பி.விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் பயன் அளிக்கும்.
- நிரந்தர வசிப்பிட அட்டையை வழக்கத்தில் கிரீன் கார்டு என குறிப்பிடுவார்கள்
- தற்போதைய நிலவரப்படி காத்திருக்கும் காலம் சுமார் 134 வருடங்கள் ஆகும்
உயர்கல்விக்காகவும், பணியின் காரணமாகவும் அமெரிக்கா சென்று அங்கேயே தங்கும் இந்தியர்களில் பலர் அந்நாட்டிலேயே நிரந்தரமாக குடியேற விண்ணப்பங்களை தாக்கல் செய்வது வழக்கம்.
அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு பல நிலை விசாரணைகளுக்கு பிறகு அங்கேயே தங்குவதற்கான நிரந்தர வசிப்பிட அட்டை (Permanent Resident Card) வழங்கப்படும். அலுவல் ரீதியாக பி.ஆர். கார்டு என குறிப்பிடப்படும் இது, வழக்கத்தில் கிரீன் கார்ட் என குறிப்பிடப்படுகிறது.
கிரீன் கார்ட் பெற்று விட்டால் அதனை ஒரு பெருமையாக கருதி அதன் காரணமாக நண்பர்களுக்கு விருந்தளித்து கொண்டாடும் அளவிற்கு அதனை பெறுவதற்கு கடும் போட்டி அங்கு நிலவுகிறது.
பணியின் காரணமாக நிரந்தரமாக அமெரிக்காவில் தங்க கிரீன் கார்டிற்கு விண்ணப்பித்து இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 18 லட்சமாகும். இது அந்நாட்டில் குடியேற விண்ணப்பித்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை ஆகும். இந்த எண்ணிக்கையில் 63 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இந்நிலையில், புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் இந்தியர்களுக்கு "காத்திருப்பு காலம்" சுமார் 134 வருடங்கள் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணியின் காரணமாக அங்கேயே தங்க விரும்பி விண்ணப்பித்து இருப்பவர்களில் அனேகமாக 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் இதனை பெறுவதற்கு முன்பாகவே இறந்து விடுவார்கள் என்றும் அதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் உள்ள முக்கிய வேலைகளுக்கு பணியமர்த்த இந்தியர்களையும், சீனர்களையுமே அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், அங்குள்ள குடியுரிமை சட்டப்படி, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு, மொத்த விண்ணப்பிங்களில் பணிசார்ந்த கிரீன் கார்டு விண்ணப்பங்கள் 7 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
சட்டரீதியான குடியேறுதலுக்கான முயற்சிகளில் உள்ள நீண்ட காலதாமதத்தை தவிர்க்க தற்போதைய ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், விண்ணப்ப தொகுப்பில் சேர்க்கப்பட்டு பிறகு அது ஏற்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு இறுதியாக கிரீன் கார்டு வாங்குவதற்கு அதிர்ஷ்டமும் தேவைப்படும் எனும் நிலை தோன்றி விட்டதாக அங்கு குடியேற துடிக்கும் இந்தியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 6 லட்சம் பேர் அடங்குவர்.
தங்களுக்கு கிரீன்கார்டு மூலம் குடியுரிமை கிடைக்கும் என காத்திருக்கும் நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அதனால் அவர்களின் எண்ணம் ஈடேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் ஆயிரக்கணக்கானவர்கள் சட்ட விரோதமாக நாட்டில் குடியேறியுள்ளனர். அவர்களால் திறமையான வெளிநாட்டினருக்கு சட்டப்பூர்வ குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து அதற்காக லட்சக் கணக்கானோர் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்கள் திறமைசாலிகள் எந்த பணியையும் மிக சரியாக செய்கின்றனர். அவர்கள் நமக்குதேவை.
ஏனெனில் நமது நாட்டில் (அமெரிக்காவில்) பல கம்பெனிகள் உள்ளன. அவற்றில் பணிபுரிய ஊழியர்கள் தேவை. திறமையின் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என்றார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டி னருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. #trump #GreenCard
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. எனவே இதை பெற அங்கு வாழும் வெளிநாட்டினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் தற்போது கிரீன் கார்டு வழங்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டு அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கிய கிரீன் கார்டு அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற 151 ஆண்டுகள் ஆகும்.
2018-ம் ஆண்டு எப்ரல் 20-ந்தேதி நிலவரப்படி 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 இந்தியர்கள் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிக குறுகிய காலத்தில் இ.பி.-1 குடியேற்ற சான்று வழங்கப்படுகிறது. இதற்கே 6 ஆண்டுகளாகும்.
இளங்கலை பட்டம் பெற்று இ.பி.-3 பட்டியலில் காத்திருப்போர் கிரீன்கார்டு பெற 17 ஆண்டுகள் ஆகும். இந்த பட்டியலில் 54,892 இந்தியர்களும், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் என 60,381 பேர் உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 273 பேர் உள்ளனர்.
இருந்தபோதிலும் இ.பி.2 பட்டியலில் கிரீன் கார்டு வழங்கப்படாமல் நீண்ட நாட்களாக பலர் காத்திருக்கின்றனர். இவர்கள் முதுகலை பட்டம் பெற்றவர்கள். இப்போது கிரீன்கார்டு வழங்கும் விகிதம் அடிப்படையில் இவர்கள் கிரீன்கார்டு பெருவதற்கு 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படாவிட்டால் கிரீன்கார்டு கிடைக்காமல் அமெரிக்காவிலேயே இவர்கள் இறக்க வேண்டும். அல்லது இந்தியாவுக்கு திரும்ப நேரிடும்.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் பேருக்கு மேல் கிரீன்கார்டு வழங்க கூடாது என்று உள்ளது. ஆரம்ப நிலையில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 684 பேரும், அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் என மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 368 பேர் உள்ளனர்.
மொத்தத்தில் ஆரம்ப நிலையில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 400 பேரும், இவர்களது மனைவி மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 819 பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 பேரும் காத்திருக்கின்றனர். #US #GreenCard #Indians
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்