என் மலர்
நீங்கள் தேடியது "groove"
- நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது.
- காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் சென்றுள்ளனர். நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசாமாக யாருக்கும் காயமோ, உயிரழப்போ இல்லை. விபத்துக்குள்ளான காரில் வந்தவர்கள், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர். இது தொடர்பாக காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.