என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "GTvCSK"
- 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
- இப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதனைடுத்து ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸ், போர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ஆவது ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தார்.
5 ஆவது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்று இன்றோடு 500 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்துவிட்டு ஜடேஜா கொண்டாடும் புகைப்படத்தைப் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
5⃣0⃣0⃣ days of "OHH JADDEEJJJJAAA" ? pic.twitter.com/aQv1dp1oJF
— Chennai Super Kings (@ChennaiIPL) October 9, 2024
- சிஎஸ்கே 11 போட்டியில் 6 வெற்றியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
- குஜராத் 11 போட்டியில் 4 வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 59-வது லீக் ஆட்டம் குஜராத் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். "இது நல்ல விக்கெட்டாக தெரிகிறது. சேஸிங் மைதானம். அதனால் நாங்கள் சேஸிங்கை எதிர்பார்க்கிறோம்" என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:-
சுப்மன் கில், சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், மேத்யூ வேட், ராகுல் டெவாட்டியா, நூர் அகமது, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, கார்த்திக் தியாகி, ரஷித் கான்.
இம்பேக்ட் மாற்று வீரர்கள்: அபிநவ் மனோகர், சந்தீப் வாரியர், பிஆர் சரத், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:-
ருதராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ஜடேஜா, டோனி, சான்ட்னெர், ஷர்துல் தாகூர், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்
இம்பேக்ட் மாற்று வீரர்கள்: ரகானே, சாய்க் ரஷீத், அவானிஷ், சமீர் ரிஸ்வி, முகேஷ் சவுத்ரி
- கனமழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது.
- இன்று வானிலை சீராக இருந்ததால் மாலை 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது.
இன்றும் மழைக்கான அறிகுறிகள் இருந்ததால் போட்டி பாதிக்கப்படும் சூழல் இருந்தது. அகமதாபாத்தற்கு மேற்கே மழை பெய்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு வானம் ஓரளவு தெளிவாக காணப்பட்டது. இதனால் சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக விர்திமான் சகா, ஷுப்மன் கில் களமிறங்கினர். மழை குறுக்கிட்டால் ஓவர்கள் குறைக்கப்படும்.
- டோனியை காண்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்து வந்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
- நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இறுதிப்போட்டியை காண வெளி மாநிலங்களில் இருந்து அகமதாபத்துக்கு வந்த ரசிகர்களுக்கு மழையால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் நாளை (இன்று) செல்லுபடியாகும். டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
அதனால் இறுதிப்போட்டியை பார்த்து விட்டுதான் ஊருக்கு செல்வதாக முடிவெடுத்த ரசிகர்கள், நள்ளிரவில் அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டோனியை காண்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்து வந்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
- மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
- 16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அகமதாபாத்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் அகமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.
ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மழை நிற்க வேண்டும் என ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து மழை நீடித்ததால் நேற்று போட்டி நடைபெறாமல் போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனை தொடர்ந்து மாற்றுநாளான இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.
- இன்றும் மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் மே 21-ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 'பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. 24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது.
26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.
போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறி வருகின்றனர்.
இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.
- நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.
அகமதாபாத்:
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டம் கடந்த 21-ந் தேதி முடிவடைந்தது.
இதன் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, ஐதராபாத் ஆகிய அணிகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.
'பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது.
26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குறைந்த அளவு ஓவர்கள் வைத்து கூட நடத்த இயலாமல் போனது.
இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.
9.45 மணிக்கு தொடங்கினால் 19 ஓவர்களாக குறைக்கப்படும். 10 மணிக்கு 17 ஓவர்களாவும், 10.30 மணிக்கு 15 ஓவர்களாகவும் குறைக்கப்படும்.
நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.
அதுவும் முடியாவிட்டால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும். நள்ளிரவு 1.20 மணிக்குள் ஆடுகளம் விளையாட தயாராக இருந்தால் சூப்பர் ஓவர் நடைபெறும்.
சூப்பர் ஓவரும் நடத்த இயலாமல் போனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருந்ததால் குஜராத் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும். அந்த அணி 'லீக்' முடிவில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று இருந்தது. சி.எஸ்.கே. 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
இன்று மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றன.
மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் டோனியால் 5-வது ஐ.பி.எல். கோப்பை கனவு நனவாகாமல் போய்விடும். தனது கடைசி தொடரில் கோப்பையுடன் விடைபெறும் ஆர்வத்தில் டோனி உள்ளார்.
போட்டி முழுமையாக நடைபெற்று சிறப்பாக ஆடி அணி கோப்பையை வெல்வதே நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.
- டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 2 கிலோ பிரியாணியை கொண்டு டோனியின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அறிவழகி.
ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு வரைந்து அசத்தியுள்ளார். காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், டெண்டுல்கர், டோனி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியிலும் வரைந்துள்ளார்.
அந்த வகையில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அறிவழகி 2 கிலோ பிரியாணியை கொண்டு 2 அடியில் டோனியின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.
இதில் ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்