என் மலர்
நீங்கள் தேடியது "Gun fire death"
- தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை.
மத்திய ஜப்பானின் கிபு பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஒரு ராணுவ வீரர், சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.
தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். உடனே மற்ற வீரர்கள், துப்பாக்கி சூடு நடத்திய வீரரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தாக்குதலை நடத்தியது யார் என போலீசார் தெரிவிக்கவில்லை.
ஓமன்:
ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டின் வாடிகபீர் பகுதியில் உள்ள மசூதி அருகே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகள், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார்? என போலீசார் தெரிவிக்கவில்லை.