search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundadam"

    • குண்டடம் துணை மின் நிலையத்–தில் 13-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குண்டடம் துணை மின் நிலையத்தில் 13-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை சூரியநல்லூர், ராசிபாளையம், காதப்புள்ளப்பட்டி, எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    காங்கயம்:

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சி பகுதியில் குண்டடம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குண்டடம் பேரூர் செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், கவுன்சிலருமான ஏ.பி.கே. தமிழரசு தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் ருத்ராவதி பேரூராட்சி கவுன்சிலர்களான சுமதி பழனிசாமி, குமார், ஜெயலலிதா பேரவை தியாகராஜன், பி.ஏ.பி.,முத்துசாமி, ெபாருளாளர் முத்துசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 

    ×