search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guru thaththa kaniga"

    • குருதத்தா கனிகா இயக்கும் திரைப்படம் 'கரவாலி'.
    • அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

    'அம்பி நீங்கே வயசாய்தோ' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் அடைந்த குருதத்தா கனிகா இயக்கும் திரைப்படம் 'கரவாலி'. குருதத்தா கனிகா பிலிம்ஸ் பேனர் சார்பில் விகே பிலிம்ஸ் உடன் இணைந்து குருதத்தா கனிகா தயாரிக்கும் இந்த படத்தில் பிரஜ்வல் தேவராஜ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

    சச்சின் பஸ்ரூர் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்நிலையில் 'கரவாலி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் பிரஜ்வல் தேவராஜ் இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

    நமது கலாச்சாரம் மற்றும் மொழிகளில் விளைந்து வேரூன்றிய கதைகளை மக்களுக்கு சொல்வதற்காகவே தாம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக குருதத்தா கனிகா கூறினார்.

    ×