என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gurugram"
- மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது.
- காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு கார் ஒன்று மின்கம்பத்தில் ஏறி அதில் சிக்கிக் கொண்டது. பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதால் விபத்து நடந்துள்ளது.
மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் எஸ்யூவி மின்கம்பத்தில் ஏறி, சாய்ந்த நிலையில் அதில் சிக்கியது.
உள்ளூர் மக்களின் உதவியால் காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார். மின்கம்பத்தில் ஏறிய காரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
விபத்து ஏற்படுத்திய ஹோண்டா அமேஸ் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுவிட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த குருகிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது.
- அரியானா மாநிலம் குருகிராமில் மழை பெய்துள்ளது.
புதுடெல்லி:
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் நேற்று இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி இருந்து. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது. ஆர்.கே.புரம் பகுதியில் மழை பெய்தது. அரியானா மாநிலம் குருகிராமிலும் மழை பெய்துள்ளது.
டெல்லியில் இன்று காலை முதலே ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வீடியோ பார்த்த காவல் துறையினர், காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர்.
- வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை காவல் துறை பறிமுதல் செய்தது.
ஓடும் காரின் மீது மர்ம நபர் ஒருவர் புஷ்அப் எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவில் உள்ள நபர் எவ்வித தயக்கமும், பயமும் இன்றி சர்வசாதாரணமாக ஓடும் காரின் மீது புஷ்அப் எடுக்கிறார்.
அதே காரில் இவருடன் பயணம் செய்தவர்கள் கார் ஜன்னலின் வெளியே தங்களது தலையை நீட்டுவது போன்ற காட்சிகளும் வைரல் வீடியோவில் இடம்பெற்று இருந்தன. வைரல் வீடியோவினை டுவிட்டரில் பகிர்ந்த பயனர் ஒருவர், அதனை குருகிராம் போக்குவரத்து காவல் துறை, குருகிராம் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் குருகிராம் காவல் துறையினரை டேக் செய்தார்.
இவரது செய்கை புஷ்அப் எடுத்த நபருக்கு வினையாக அமைந்து இருக்கிறது. வைரல் வீடியோவை பார்த்த காவல் துறையினர், அதில் உள்ள காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர். பொது இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நபருக்கு போக்குவரத்து காவல் துறையினர் ரூ. 6 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.
மேலும் பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், அடுத்தவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் குருகிராம் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். பாஜக, தனது எம்எல்ஏக்களை அரியானா மாநிலம் குருகிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால் இந்த குழப்பத்திற்கு பாஜக காரணம் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். அத்துடன் குருகிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டார். எனவே, பாஜக எம்எல்ஏக்கள் விரைவில் பெங்களூரு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaPolitics #Yeddyurappa #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்