என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guruvayur express"

    • ரெயில் குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக நாகர்கோவில் டவுனில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.
    • திருவனந்தபுரம் சென்டிரல்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்.

    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா-பாரசாலா ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), நாகர்கோவில் டவுன்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் டவுனில் நிறுத்தப்படும்.

    * மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 29-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), குருவாயூர்-நாகர்கோவில் டவுன் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக நாகர்கோவில் டவுனில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    * மங்களூரு சென்டிரலில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16649), திருவனந்தபுரம் சென்டிரல்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்.

    * மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 29-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மங்களூரு சென்டிரல் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16650), கன்னியாகுமரி-திருவனந்தபுரம் சென்டிரல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக, திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு சென்டிரல் செல்லும்.

    * மதுரையில் இருந்து வரும் 28-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16729), அதற்கு மாற்றாக மதுரையில் இருந்து இரவு 11.50 மணிக்கு (30 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு புனலூர் செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஒரு மாதத்துக்கு குருவாயூரில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலுவா இடப்பள்ளி அருகே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (எண் 16128) குருவாயூரில் இருந்து இரவு 9.25 மணிக்கு பதிலாக, 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.25 மணிக்கு புறப்படும்.

    இந்த மாற்றம் நாளை (வியாழக்கிழமை) முதல் ஜூலை 23-ந் தேதி வரை (செவ்வாய் மற்றும் புதன்கிழமை நீங்கலாக) அமலில் இருக்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 
    ×