என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka scam case"

    • முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
    • நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறி வருவதாக அதிருப்தி தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் டெல்லி சி.பி.ஐ. வழக்கை விசாரித்து வருகிறது.

    இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சி.பி.ஐ. இவர்களுக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் டி.ஜி.பி., சென்னை காவல் துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது.

    இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

    இந்த வழக்கு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிமன்ற விசாரணைக்கும் இன்னும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறி வருவதாக அதிருப்தி தெரிவித்தார்.

    பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து விசாரணை அதிகாரி அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்தி நீதிபதி உத்தரவிட்டார். #Gutka
    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இவர்களது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்கள் 6 பேரும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்ற காவலை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஜவகர் உத்தரவிட்டார். #Gutka
    குட்கா ஊழல் வழக்கில் கைதாகி உள்ள மாதவராவிடம் சிபிஐ போலீசார் 8 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியதில் ஊழல் குறித்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் இந்த வழக்கில், தமிழகத்தின் முக்கிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாதவராவுக்கு சொந்தமான சென்னை செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அவரை அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த ஆவணங்கள் அடிப்படையில், மாதவராவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், குட்கா ஊழல் தொடர்பாக, மாதவராவுக்கு சொந்தமான வங்கி கணக்குகளையும் சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளனர். #GutkhaScam #CBI
    ×