என் மலர்
நீங்கள் தேடியது "Gutkha scam"
தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட அரசு ஊழியர்களுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சிக்கிய ரகசிய டைரி மூலம் இந்த தகவல்கள் அம்பலமானது.
அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரம் தேதிவாரியாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த டைரி தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த தமிழக அரசுக்கு வருமானவரித் துறை பரிந்துரை செய்தது. ஆனால் விசாரணை தாமதமானதால் சி.பி.ஐ விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது குட்கா ஊழல் வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை தீவிரமடைந்து உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் சென்னை வந்து கடந்த ஒருவாரமாக முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. உதவியாளர் சரவணனிடம் 3 நாட்கள் விசாரணை நடந்து உள்ளது.

அவர்கள் இருவரும் நீண்ட நேரம் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #GutkhaScam #EdappadiPalaniswami #Vijayabaskar
குட்கா ஊழல் விசாரணைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள்.
அமைச்சர் ரமணா முன்வாசல் வழியாகவே வந்து சென்றார். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு எப்போது வருகிறார்? எப்போது செல்கிறார்? என்பது தெரியவே இல்லை. அவரை படம் பிடிப்பதற்காக சி.பி.ஐ. அலுவலக வாசலில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களும், வீடியோ கேமராமேன்களும் காத்து கிடந்தனர்.
ஆனால் 2 நாட்கள் நடந்த விசாரணைக்கும் முன்வாசல் வழியே வரவில்லை. வாடகை காரில் பின்வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வந்து சென்றார். குட்கா விவகாரம் பற்றி பலமுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதற்கு முன்னர் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கு பதில் அளித்துள்ள அவர், என் மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் ரகசியமாக வந்து செல்வது புரியாத புதிராக உள்ளது. #GutkhaScam #MinisterVijayabaskar #Vijayabaskar
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனாலும் தமிழகத்தில் குட்கா தொடர்ந்து ரகசியமாக விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள குட்கா உற்பத்தி ஆலைகள் மற்றும் குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது டைரி ஒன்று சிக்கியது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அப்போதைய புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன், அப்போதைய செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.40 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு முதலில் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்தநிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கும் சி.பி.ஐ. போலீசார் நேற்று சம்மன் அனுப்பினார்கள்.
அந்த சம்மனில் அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) ஆஜர் ஆகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் ரமணா இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலையில் ஆஜராகிறார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்படும்.
குட்கா வழக்கில் இதுவரை அதிகாரிகள் மட்டத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்தது. இப்போது புதிய திருப்பமாக அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அடுத்த கட்டமாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. #GutkhaScam #CBI #Vijayabaskar #Ramana
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் 3 அதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடமும் விசாரணை செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பினார்கள்.

தொடர்ந்து 8-ந்தேதியும் சரவணனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். மீண்டும் 11-ந்தேதி ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி இருந்தனர். அதன்படி இன்று 3-வது நாளாக சரவணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அப்போது சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் வேறு சிலருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. இதில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #Gutkha #GutkhaScam #Vijayabaskar
குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீதும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
புழல் உதவி கமிஷனராக பணியாற்றிய மன்னர்மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரது பெயர்களும் குட்கா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இவர்கள் யார் மீதும் இதுவரையில் நடவடிக்கை பாயவில்லை. அதே நேரத்தில் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குட்கா குடோன் அதிபர் மாதவரராவ் உள்ளிட்ட 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் அதிகாரிகள் ஆவர்.

இதன்படி அவருக்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை ஏற்று சரவணன் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதன் காரணமாக 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சரவணன் இன்று காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் குட்கா விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Gutkha #GutkhaScam #Vijayabaskar

அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
அதன்பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை.
இந்த முறையும் அமைச்சரின் உதவியாளர் ஆஜராகவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது. #Gutkhascam #CBI #MinisterVijayabaskar

மதுரவாயல் சுற்று வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மதுரவாயல் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் வானகரம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் நேற்று இரவு போலீசாருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் ஜேசுராஜ் (50) கைது செய்யப்பட்டார். குடோனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மதுரவாயல், கோயம்பேடு,வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இங்கிருந்து குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.
யார்-யாருக்கு குட்கா அனுப்பப்பட்டது? குட்கா விற்பனை செய்யும் கடைகள் எவை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது.
குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆகவே, குட்கா மாமூல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம் பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்.
மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்கா விற்பனை “மாமூல்” விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. மதிக்க வேண்டும்.
அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத விசாரணை கோரி தி.மு.க.வின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிட நேரிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் இதில் அடிபட்டன.
குட்கா குடோனில் சோதனை நடந்த போது புழல் உதவி கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் பெயரும் குட்கா விவகாரத்தில் சிக்கியது. இதன் காரணமாக குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றே எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரே கைது செய்யப்பட்டனர். 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக போலீசார் மீது சி.பி.ஐ.யின் பாய்ச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை உறுதி செய்யும் வகையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தபட்டது.
இதன் தொடர்ச்சியாக அவர்கள் மீது கண்டிப்பாக மேல் நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சோதனை முடிந்த பின்னர் போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சம்பத், முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதற்கு விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக கோர்ட்டில் பதில் அளித்த சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் சம்பத் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தது. இதனால் முன்ஜாமீன் தேவை இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் விசாரணை முடிந்த பின்னர் அதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் துறையினர் மீதே சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.
ஆனால் அது தொடர்பாக எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததும், குற்றப்பத்திரிகையில் யாருடைய பெயரும் சேர்க்கப்படாமல் இருப்பதும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #gutkhascam #cbi #ministervijayabaskar
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர்குப்தா ஆகியோர் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது சட்டவிரோதமான செயலுக்கு உடந்தையாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே சி.பி.ஐ. கோர்ட்டிலும், சென்னை ஐகோர்ட்டிலும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் செந்தில்முருகன், என்.கே.பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Gutkha #CBI
குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரிய அவர்கள் 6 பேரின் மனுவை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Gutkhascam