search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hair dryer"

    • தனது கையில் வைத்தபடி தலைமுடி உலர்த்தும் உபகரணத்தை ஆன் செய்துள்ளார்.
    • முடி உலர்த்தும் எந்திரத்தில் வெடி பொருளை வைத்து அனுப்பிய ஷீலாவந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலகல் டவுனை சேர்ந்தவர் சசிகலா. இவரது வீட்டிற்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. இதையடுத்து பார்சல் நிறுவன ஊழியர் சசிகலாவை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தான் எந்த பொருளும் ஆர்டர் செய்யவில்லை என்றும், தற்போது தான் வெளியில் இருப்பதாகவும் கூறினார்.

    அதற்கு அந்த ஊழியர் இப்போதே உங்கள் பொருளை வாங்கிச் செல்லுங்கள் என சொல்லியுள்ளார். இதனால் சசிகலா தனது தோழியான பக்கத்துவீட்டை சேர்ந்த பசவராஜேஸ்வரி (வயது 40) என்பவருக்கு போன் செய்து, அந்த கூரியரை வாங்கி வைக்கும்படி கூறியுள்ளார்.

    பின்னர் அதனை தனது வீட்டுக்கு எடுத்து சென்று பசவராஜேஸ்வரி பிரித்து பார்த்துள்ளார். அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த ஒருவர், அந்த உபகரணத்தை எப்படி செயல்படுகிறது என செயல்விளக்கம் காட்டும்படி கூறியுள்ளார். இதையடுத்து பசவராஜேஸ்வரி தனது வீட்டில் உள்ள மின் சுவிட்ச் பாக்சில் மின்வயரை இணைத்துவிட்டு, தனது கையில் வைத்தபடி தலைமுடி உலர்த்தும் உபகரணத்தை ஆன் செய்துள்ளார்.

     


    ஷீலாவந்த்

    அந்த சமயத்தில் திடீரென அந்த உபகரணம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பசவராஜேஸ்வரியின் இரு கைகளும் மணிக்கட்டு அளவுக்கு துண்டாகியது. கைவிரல்கள் துண்டாகி வீட்டின் அறை முழுவதும் ரத்தம் சிதறியது. இதனால் வலியில் கதறி துடித்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

    பசவராஜேஸ்வரிக்கும் அவரது உறவினர் ஷீலாவந்த் என்பவருக்கும் திருமணத்துக்கு முன்பே பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பசவராஜேஸ்வரியின் கணவர் இறந்த பின்பும் ஷீலாவந்த் தொடர்ந்து பழகி வந்தார். இதையடுத்து பக்கத்துவீட்டை சேர்ந்த சசிகலா அவருடன் பழகுவதை நிறுத்த சொல்லியுள்ளார். இது பற்றி தெரியவந்ததும் ஷீலாவந்த் ஆத்திரமடைந்து சசிகலாவை கொல்ல திட்டமிட்டார். கிரானைட் குவாரியில் வேலை பார்க்கும் ஷீலாவந்த், சசிகலா மீது உள்ள ஆத்திரத்தில் ஒரு முடி உலர்த்தும் எந்திரத்தை வாங்கி அதில் குவாரிகளில் பாறைகளை வெடிக்க பயன்படுத்தப்படும் டெட்டனேட்டரை பொருத்தினார்.

    பின்னர் அதை சசிகலாவின் முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பி உள்ளார். அப்போது சசிகலா வீட்டில் இல்லாததால் அதை பசவராஜேஸ்வரி வாங்கி பயன்படுத்திய போதுதான் அது வெடித்து சிதறியது தெரியவந்தது. இதையடுத்து முடி உலர்த்தும் எந்திரத்தில் வெடி பொருளை வைத்து அனுப்பிய ஷீலாவந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகலாவுக்கு ஒரு ஹேர் ட்ரையர் பார்சல் வந்துள்ளது.
    • ஹேர் ட்ரையர்-ஐ வாங்கிய பசவராஜேஸ்வரி அது எப்படி வேலை செய்கிறது என்று சோதித்து பார்ப்பதற்காக ஆன் செய்துள்ளார்.

    கர்நாடகாவில் பார்சலில் வந்த ஹேர் ட்ரையர் வெடித்துச் சிதறியதில், பசவராஜேஸ்வரி என்பவரின் காய் விரல்கள் துண்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் பாகல்காட் பகுதியில் சசிகலா, பசவராஜேஸ்வரி என்ற 2 பெண்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர். பசவராஜேஸ்வரியின் கணவர் ராணுவத்தில் பணியாற்றும்போது உயிரிழந்தார்.

    இந்நிலையில் சசிகலாவுக்கு ஒரு ஹேர் ட்ரையர் பார்சல் வந்துள்ளது. ஆனால் சசிகலா ஊரில் இல்லாததால் அந்த பார்சலை வாங்கி ஹேர் ட்ரையர் வேலை செய்கிறதா என்று பார்க்குமாறு பசவராஜேஸ்வரிவிடம் சசிகலா கூறியுள்ளார்.

    இதனையடுத்து ஹேர் ட்ரையர்-ஐ வாங்கிய பசவராஜேஸ்வரி அது எப்படி வேலை செய்கிறது என்று சோதித்து பார்ப்பதற்காக ஆன் செய்துள்ளார். அப்போது திடீரென ஹேர் ட்ரையர் வெடித்து சிதற பசாம்மாவின் முகம், கைகளில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக பசவராஜேஸ்வரியை உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த வழக்கின் விசாரணையில் சசிகலா ஹேர் ட்ரையர் எதுவும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

    முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது சசிகலாவிற்கும் பசவராஜேஸ்வரிக்கும் ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மகளின் இணையதள கல்விக்கு பயன்படும் என்று நினைத்தார்.
    • ஒரு டப்பாவில் எறும்பு கொல்லி மருந்து துகள்கள் இருந்துள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகேஉள்ள வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 40). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் உங்களது செல்போன் எண்ணுக்கு புதிய ஆபர் ஒன்று அறிமுகம் செய்வதாகவும் அதன்படி விலை உயர்ந்த செல்போன் ஆபர்விலையில் ரூ.2500க்கு தருவதாகவும், முகவரி சொன்னால் செல்போனை அனுப்பிவைப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய கண்ணன் சுமார் ரூ.25,000 மதிப்புள்ள அந்த மாடல் செல்போன் தனது மகளின் இணையதள கல்விக்கு பயன்படும் என்று நினைத்தார். இதையடுத்து அவர் தனக்கு செல்போன் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து நேற்று பல்லடம் தபால் நிலையத்திலிருந்து கண்ணனுக்கு போன் செய்த ஊழியர் ஒருவர் உங்களுக்கு பார்சல் வந்திருக்கிறது என்று கூறியதையடுத்து அங்கு சென்ற கண்ணன் ரூ.2500 பணத்தை கொடுத்து வந்திருந்த பார்சலை பிரித்து பார்த்தார்.

    அப்போது பார்சலில் விலை உயர்ந்த செல்போனுக்கு பதிலாக தலை முடியின் ஈரப்பதத்தை காய வைக்கும் ஹேர் டிரையர் மெஷின் அதனுடன் பவர் பேங்க் என்ற பெயரில் ஒரு டப்பாவில் எறும்பு கொல்லி மருந்து துகள்கள் இருந்துள்ளது. இதனால் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மோசடி செய்த ஆன்லைன் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    ×