search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haj pilgrims"

    • மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • 56 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    திருப்பூா் :

    தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும்முழு உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மாவட்டத் தலைநகரங்களில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம் அவிநாசி சாலையில் பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தாய் சேய் நல விடுதியில் தொடங்கியது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ஜெகதீஷ்குமாா் மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 56 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் முகாமில் 62 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹஜ் சா்வீஸ் சொசைட்டியின் திருப்பூா் மாவட்ட உறுப்பினா்கள் சபியுல்லா, சையது ஆதில், சைபுதீன், முகமது ஆரிப் உள்ளிடடோா் செய்திருந்தனா்.

    ×