என் மலர்
நீங்கள் தேடியது "Harshika Poonacha"
- இவர்கள் உள்ளூர் கன்னட மக்கள் என்று தெரிவித்த அவர்கள்,
- தொடர்ந்து நாங்கள் கன்னடத்தில் பேசியது, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகை ஹர்ஷிகா பூனச்சா. இவர் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள பிரபலமான இடத்தில் அமைந்துள்ள ரெஸ்டாரன்டில் இரவு உணவு முடித்துவிட்டு காரில் அமர முயன்றபோது, மோசமான வார்த்தைகள் மூலம் அவதூறு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை ஹர்ஷிகா பூனச்சா கூறுகையில் "இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஃப்ரேசர் நகர்ப்பகுதிக்கு அருகில் உள்ள புலிகேஷி நகரின் மஸ்ஜித் சாலையில் உள்ள கரமா என்ற ரெஸ்டாரன்டில் நான் எனது குடும்பத்தினருடன் சாப்பிட சென்றிருந்தேன்.
நாங்கள் காரில் ஏரிய பின்னர் காரை பார்க்கிங் பக்கத்தில் இருந்து வெளியே எடுத்தபோது, திடீரென்று இருவர் டிரைவர் பக்கம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களது கார் கொஞ்சம் பெரியதாக இருந்ததால், சட்டென்று மூவ் ஆனதால் அவர்கள் மீது உரசியிருக்கிறது.
நாங்கள் காரை சற்று நகர்த்தியபோது, அவர்கள் இருவரும் அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தினர். மேலும், எனது கணவரின் முகத்தில் தாக்க முயன்றனர். இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனக் கூறினர். என்னுடைய கணவர் மிகவும் அமைதியாக இருந்தார்.
அப்போது திடீரென 30-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் குவிந்து எனது கணவரின் செயினை பறிக்க முயன்றனர். சற்று நேரத்திற்குள் அவர்களை எங்களுடைய காரை சேதப்படுத்தி, எங்களை தாக்க முயன்றனர். இவர்கள் உள்ளூர் கன்னட மக்கள் என்று தெரிவித்த அவர்கள், தொடர்ந்து நாங்கள் கன்னடத்தில் பேசியது, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள உள்ளூர்வாசிகளான நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? நாம் பாகிஸ்தானில் வசிக்கிறோமா? ஆப்கானிஸ்தானில் வசிக்கிறோமா? என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.