search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haryana communal riots"

    • விஷமிகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவு செய்கின்றனர்
    • கலவரத்தில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்டவர்கள் அரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்

    இணையத்தில் வரும் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் உண்மைதன்மையை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் உணர்வுபூர்வமான விஷயங்களில் விபரீத நோக்கத்துடன் பல விஷமிகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவு செய்கின்றனர்.

    அத்தகைய பொய் ஒன்று தற்போது தெரிய வந்திருக்கிறது.

    அரியானாவின் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31 அன்று இரு பிரிவினருக்கிடையே மோதல் வெடித்து அது வன்முறையாக மாறியது. வன்முறை வெடித்ததால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 300-க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சட்டவிரோதமாக அரியானாவில் குடியேறி வியாபாரமும் செய்து வந்த ஒரு சிலர்தான் இதற்கு காரணம் என கூறி அரியானா அரசாங்கமும், நிர்வாகமும் அங்குள்ள சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வசிப்பிடங்களையும் கடைகளையும் இடித்து தள்ளியது.

    இது சம்பந்தமாக பல புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பரவலானது. இதனையடுத்து இணைய சேவைகளை அந்த மாநில அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதனால் ஒரு பிரிவை சேர்ந்தவரின் வீடு இடிக்கப்பட்டதாகவும் அதனை அவர் செயலற்று வேடிக்கை பார்ப்பதாகவும் ஒரு புகைப்படம் வைரலானது.

    இதனை பதிவு செய்தவர், "ஒரு அப்பாவி தன் வீடு அரசாங்கத்தால் இடிக்கப்படுவதை பரிதாபமாக பார்க்கிறார்" என ஒருவரி செய்தியும் உடன் சேர்த்து வெளியிட்டு இருந்தார்.

    ஆனால் ஆய்வில் இந்த புகைப்படம் 2022 ஏப்ரலில் மத்திய பிரதேசத்தில் உள்ள கர்கோன் பகுதியில் அந்த மாநில அரசாங்கம் அங்கு நடந்த கலவரத்தினையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையின் போது வெளியான புகைப்படம் என தெளிவாகியுள்ளது.

    அரியானாவில் இணைய சேவை இடைநிறுத்தம் ஆகஸ்ட் 13 வரை தொடரும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

    ×