search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hasan Raza"

    • ஜடேஜா இந்தப் போட்டியில் 5 விக்கெட் எடுத்து, தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார்.
    • டிஆர்எஸ் முடிவில் இந்திய அணி ஏமாற்று வேலை செய்து விக்கெட் எடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டி உள்ளார்.

    கொல்கத்தா:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது ஜடேஜா வீசிய பந்தில் வான் டேர் டுசென் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்கப்பட்டு அவுட் ஆனார். முதலில் ஜடேஜா வீசிய பந்து அவர் காலில் பட்ட போது அவுட் கேட்கப்பட்டது. அப்போது நடுவர் அவுட் தர மறுத்து விட்டார். பின்னர் ஜடேஜா ரிவ்யூ கேட்குமாறு கேப்டன் ரோகித்திடம் கேட்டார். அதன் பின் ரிவ்யூ கேட்கப்பட்டது. அப்போது ரீப்ளேவில் பந்து லெக் திசையில் வருவது போல இருந்தது. ஆனால், மிடில் ஸ்டம்ப்பில் பந்து படுவதாக ரீப்ளேவில் காட்டப்பட்டது.

    இந்நிலையில் டிஆர்எஸ் முடிவில் இந்திய அணி ஏமாற்று வேலை செய்து விக்கெட் எடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டி உள்ளார்.

    இது குறித்து ஹசன் ராசா கூறியதாவது:-

    ஜடேஜா இந்தப் போட்டியில் 5 விக்கெட் எடுத்து, தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார். இங்கே நாம் டிஆர்எஸ் கேட்கப்பட்டது பற்றி பேச வேண்டும். டுசென் பேட்டிங் செய்யும் போது, பந்து லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி மிடில் ஸ்டம்ப்பில் படுகிறது. அது எப்படி சாத்தியம்? அந்த பந்து லைனில் பிட்ச் ஆகி லெக் ஸ்டம்ப் நோக்கி தான் போனது. எல்லோரையும் போல நானும் என் கருத்தை சொல்கிறேன். இதை நாம் கவனிக்க வேண்டும். டிஆர்எஸ்-இல் ஏமாற்று வேலை நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×