search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hassan Ali"

    • ஜம்மு-காஷ்மீரில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு.
    • 9 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் ஷ்வ்கோரி கோவிலில் இருந்து வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பேருந்தில் 53 யாத்ரீகர்கள் சென்ற கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து பேருந்து போனி பகுதியில் உள்ள தெர்யாத் அருகே பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 41 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி "எல்லா கண்களும் வைஷ்ணவ தேவி தாக்குதல் மீது" என எழுத்தப்பட்ட போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்துள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

    காசாவின் ரபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரபாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தற்காலி முகாம் தீப்பிடித்து எரிந்து பலர் உயிரிழந்தனர்.

    அப்போது எல்லா கண்களும் ரஃபா மீது என்ற வாசத்துடன் ஒரு படம் இணைய தளத்தில் வைரலாக பரவியது. இதற்கு இஸ்ரேல் அக்டோபர் 7-ந்தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டிருந்தது.

    அந்த வகையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

    ஹசன் அலியின் மனைவி சமியா இந்தியாவை சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் திவிரமாக தயாரகும் வகையில் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    அந்தவகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பக்கார் ஜமான், இப்டிகார் அகமது, இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஹசன் அலி, ஹாரிஸ் ராப், முகமது அமீர், நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் அணிக்காக ஹசன் அலி விளையாட பாகிஸ்தான் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், கவுண்டி கிரிக்கெட்டில் ஹசன் அலி தனது கடமைகளை தொடர அனுமதிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில், ஹாரிஸ் ரவுஃபின் காயம் கரணமாக ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார்" என்று தெரிவித்துள்ளது. 

    ×