என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hayley Matthews"

    • சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.
    • அவரது அணி தோல்வியடைந்த போதிலும், ஆட்டநாயகி விருது மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டது.

    மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

    இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மேத்யூஸ் ஒரு உலக சாதனையைப் பதிவு செய்தார்.

    அதன்படி இப்போட்டியில் சதம் விளாசி ஆட்டநாயகி விருதை கைப்பற்றியதன் மூலம் 54 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங்கில் சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.

    இருப்பினும் அவரது அணியானது இப்போட்டியில் தோவ்லியைத் தழுவியது. இதன்மூலம் ஒரே போட்டியில் சதம் அடித்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியும், அந்த அணி தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறையாகும்.

    மேலும் மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார்.

    அவரது அணி தோல்வியடைந்த போதிலும், அவர் இந்த விருதை வெல்வது இது 5-வது முறையாகும். இந்தப் பட்டியலில், அவர் தனது சக நாட்டவரான ஸ்டெஃபனி டெய்லரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த அட்டத்தில் அதிக ஆட்ட நாயகி விருதுகள்

    5-ஹேலி மேத்யூஸ்

    4-ஸ்டஃபானி டெய்லர்

    2-எமி சாட்டர்த்வைட்

    2-நிக்கோலா பிரவுன்

    2-கிளேர் டெய்லர்

    • தசைப்பிடிப்பு காரணமாக 39-வது ஓவரின் போது 95 ரன்னில் Retired hurt ஆகி மேத்யூஸ் வெளியேறினார்.
    • இதனையடுத்து 41 ஓவரில் ஒரு பந்தை மட்டும் சந்தித்து 99 ரன்களுடன் மீண்டும் Retired hurt ஆகி வெளியேறினார்.

    ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 45 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மேத்யூஸ் தசைப்பிடிப்பு காரணமாக 39-வது ஓவரின் போது 95 ரன்னில் Retired hurt ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து 41 ஓவர் 3 பந்தில் களமிறங்கிய அவர், அந்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அடித்த உடனே தசைப்பிடிப்பு காரணமாக கீழே விழுந்தார். நடக்க முடியாமல் இருந்த அவரை Stretcher-ல் கொண்டு சென்றனர். 4-வது பந்தில் 9-வது விக்கெட் இழந்ததால் மீண்டும் மேத்யூஸ் களமிறங்க வேண்டி இருந்தது. இதனால் அணியின் வெற்றிக்காக மீண்டும் களமிறங்கிய அவர் சதம் விளாசி அசத்தினார். அவர் 113 பந்தில் 114 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    எனினும் அவரால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. 11 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.

    உடல் மோசமாக இருந்தாலும் அணிக்காக விளையாடிய விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

    • ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
    • ஓய்வு பெற்ற தியான்ட்ரா டோட்டினிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றிருந்த தியான்ட்ரா டோட்டினிற்கு இடம் கிடைத்துள்ளது.

    ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்டேஃபானி டெய்லர், ஷெர்மைன் காம்பெல், ஷமில கன்னெல் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளுடன், சில இளம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி:

    ஹீலி மேத்யூஸ் (கே), ஷெர்மைன் காம்ப்பெல்லே, ஆலியா அலீன், அஃபி பிளெட்சர், அஷ்மினி முனிசார், செடியன் நேஷன், சினெல்லே ஹென்றி, டியான்ட்ரா டோட்டின், கரிஷ்மா ராம்ஹராக், மாண்டி மங்ரு, நெரிசா கிராப்டன், கியானா ஜோசப், ஷமிலா கானல், ஸ்டேஃபானி டெய்லர், ஜைடா ஜேம்ஸ்.

    ×